பா.ம.க.வை காட்டமாக விமர்சித்த பெங்களூரு புகழேந்தி அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ்:ஓபிஎஸ்- ஈபிஎஸ் அதிரடி
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியை (பா.ம.க.வை) கடுமையாக விமர்சித்த அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி அக்கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக ஓ.பன்னீர்ச்செல்வம்- எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அதிரடியாக அறிவித்துள்ளனர்.
சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்று 23 இடங்களில் போட்டியிட்டது. இதில் 5 இடங்களில் மட்டும் பா.ம.க.வென்றது.

அதிமுகவுக்கு எதிராக அன்புமணி கருத்து
இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை நாங்கள் ஒரு பொருட்டாக மதிப்பது இல்லை; பா.ம.க. மட்டும் கூட்டணியில் இல்லாமல் இருந்தால் அதிமுக 20 இடங்களில் கூட ஜெயித்திருக்காது என பாமகவின் இளைஞரணித் தலைவரும் ராஜ்யசபா எம்.பி,யுமான அன்புமணி விமர்சித்திருந்தார். இதற்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

பதிலடி தந்த புகழேந்தி
அதிமுகவின் செய்தித் தொடர்பாளரான பெங்களூரு புகழேந்தி நேற்று செய்தியாளர்களிடம் பாமக குறித்து பேசினார். அப்போது, பாமகவுக்கு 6 தொகுதிகளில்தான் செல்வாக்கு இருக்கிறது. ஓபிஎஸ் கையெழுத்து போட்டதால்தான் அன்புமணி, ராஜ்யசபா எம்.பி.யாகி இருக்கிறார் என பதிலடி கொடுத்தார்.

பெங்களூரு புகழேந்தி நீக்கம்
இதனால் அதிமுக- பாமக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் சென்னையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், அதிமுக செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

கட்சிக்கு புகழேந்தியால் அவப்பெயர்
அந்த கூட்டறிக்கையில், அதிமுகவின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதால் கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வ்வகையில் நடந்து கொன்டதாலும் கட்சி கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் வா. புகழேந்தி (அதிமுக செய்தித் தொடர்பாளர், புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர்) இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார். அவருடன் அதிமுக தொண்டர்கல் யாரும் எவ்விதத் தொடர்பும் வைத்து கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications