Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடிக்கு ஒரு நல்ல செய்தி.. ஒரு கெட்ட செய்தி! குவிந்த விருப்பமனுக்கள்.. மல்லுக்கட்டும் ர.ர.க்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிட அதிமுகவினர் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கட்சித் தலைமையிடம் விருப்ப மனுக்கள் வழங்கும் பணியில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், வருங்கால வேட்பாளர் தேர்வில் கட்சித் தலைமைக்கு கடும் நெருக்கடி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை அதிமுக தொடங்கிவிட்டது. நேற்று முன்தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. முதல் நாளிலேயே 1200க்கும் அதிகமானோர் விருப்பம் மனுக்களை பெற்றுள்ளனர்.

எடப்பாடி போட்டியிட வேண்டும் என சுமார் 300 மனுக்களும், தாங்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்து 800க்கும் மேற்பட்ட மனுக்களும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக மதுரை மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் அதிக அளவில் விருப்பமான வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Edappadi palaniswami AIADMK Assembly Election

2026 சட்டமன்ற தேர்தல்

ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் 10 தொகுதிகளுக்கு போட்டியிட வாய்ப்பு கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் யாருக்கு சீட் ஒதுக்குவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள் தவிர்த்து இரண்டாம் கட்ட நிர்வாகிகள் பலரும் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டுவதால் மதுரையில் சீட்டு ஒதுக்குவதில் இந்த முறை நிச்சயம் பஞ்சாயத்து வரும் என்கின்றனர் மதுரை மாவட்ட ரத்தத்தின் ரத்தங்கள். மதுரை மாவட்டத்தில் அதிமுக அமைப்பு ரீதியாக மாநகர், புறநகர் கிழக்கு மற்றும் புறநகர் மேற்கு என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்படுகிறது.

மதுரை தொகுதிகள்

மாநகர் மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, கிழக்கு மாவட்டச் செயலாளராக விவி. ராஜன் செல்லப்பா, மேற்கு மாவட்டச் செயலாளராக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் உள்ளனர். இந்த மூன்று மாவட்டங்களிலும் உள்ள பெரும்பாலான தொகுதிகளில், ஒரே இடத்திற்கு பலரும் போட்டியிட தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா அரசியல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலிருந்த காலத்தில், மாவட்டச் செயலாளர்கள் முதல் கிளைச் செயலாளர்கள் வரை அடிக்கடி மாற்றங்கள் நடைபெறும். உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் வசதி, பதவி என்பதைக் கணக்கில் கொள்ளாமல் அடிமட்டத் தொண்டர்களுக்கும் வாய்ப்பளித்தவர் ஜெயலலிதா. அதனால், அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் வரை யார் போட்டியிடுவார்கள் என்பதை யாராலும் கணிக்க முடியாத நிலை இருந்தது.

எடப்பாடி பழனிசாமி

ஆனால், தற்போதைய சூழலில், எந்தத் தொகுதியில் யார் போட்டியிட வாய்ப்பு அதிகம் என்பதை பட்டியல் வெளியாகும் முன்பே எளிதில் கணிக்க முடிகிறது என்ற விமர்சனமும் கட்சிக்குள் உள்ளது. இருந்தாலும், சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி," சாதாரண கிளைச் செயலாளராக இருந்து இந்த நிலைக்கு வந்தவன் நான். அதிமுகவில் யார் வேண்டுமானாலும் நாளை இந்த நிலைக்கு வரலாம். கட்சிக்காக உழைக்கும் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும்" என கூறியது, நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக சீட் போட்டி

இந்த நம்பிக்கையால், விருப்ப மனு விநியோகம் தொடங்கிய முதல் நாளிலேயே மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தலைமை அலுவலகத்தில் ஆர்வத்துடன் மனுக்களை வழங்கி வருகின்றனர். செல்வாக்கு மிக்கவர்கள் போட்டியிட தயாராகும் தொகுதிகளிலும், அவர்களை எதிர்த்து மற்ற நிர்வாகிகள் இந்த முறை 'சீட்' கேட்டு களமிறங்க தயாராகி வருவது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக விருப்ப மனு

வரும் 23-ம் தேதி விருப்ப மனு வழங்க கடைசி நாளாக இருப்பதால், 24-ம் தேதி யார் யார் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர் என்ற முழு விவரங்கள் வெளியாகும். அதன் பிறகு, வேட்பாளர் தேர்வைச் சுற்றி கட்சிக்குள் முட்டல், மோதல்கள், புகார்கள் அதிகரிக்கலாம் என்றும், இது கட்சித் தலைமைக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தலாம் என்றும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக வேட்பாளர் தேர்வு

இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், "ஜெயலலிதா காலத்தில் மாவட்டச் செயலாளர்களின் பரிந்துரையை மீறியும் பலருக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்போது, கட்சிக்காக தீவிரமாக உழைக்கும், தொகுதிகளில் உண்மையான செல்வாக்கு கொண்ட பல நிர்வாகிகள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். அவர்களின் விருப்ப மனுக்களையும் பரிசீலனை செய்து, தகுதியானவர்களுக்கு பழனிசாமி வாய்ப்பு வழங்க வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+