சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தர்மயுத்தமா.. அது கர்ம யுத்தம்! ‘அதை’ செய்திருந்தால் ஜெயலலிதா பிழைத்திருப்பார்! ஜெயக்குமார் பளீர்!

Google Oneindia Tamil News

சென்னை : ஓபிஎஸ் முதல்வராக இருந்த நிலையில், அதிகாரத்தில் சசிகலா இருந்த நிலையில் வெளிநாட்டுக்கு அழைத்து சென்று மருத்துவ வசதி செய்திருந்தால் ஜெயலலிதா உயிர் பிழைத்திருப்பார் எனவும், அதை தான் ஆறுமுகசாமி ஆணையமும் கூறியுள்ளது எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரி வேட்டில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்‌ அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். அப்போது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கடுமையாக விமர்சித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர் , 'சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் அவரிடமே சரணடைந்துள்ளார். ஓபிஎஸ் நடத்துவது தர்ம யுத்தம் 2.0 அல்ல, கர்ம யுத்தம்.

அதிமுக தான் திமுக அரசை காப்பாத்தி இருக்கு.. கொளத்தூர் என்ன கன்னித்தீவா? - கொதித்த ஜெயக்குமார்! அதிமுக தான் திமுக அரசை காப்பாத்தி இருக்கு.. கொளத்தூர் என்ன கன்னித்தீவா? - கொதித்த ஜெயக்குமார்!

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

ஓபிஎஸ் அதிமுக அரசையே எதிர்த்து வாக்களித்துள்ளார். புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகையை உடைத்து, ஜெயலலிதாவின் அறையை காலால் உதைத்துள்ளார் . 62 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பக்கம் உள்ளனர், 62 பெரியதா? 4 பெரியதா? எதிர்க்கட்சி துணை தலைவரை விதிகளை தூக்கிபோட்டுவிட்டு சபாநாயகர் அறிவிக்காமல் உள்ளார். திமுக ஒபிஎஸ்க்கு பின்புலமல்ல, பக்க பலமாக உள்ளார். ஓபிஎஸ் பேச்சை இனி யாரும் நம்புவதாக இல்லை, ஓபிஎஸ் என்ன சொன்னாலும் அது விழலுக்கு இறைத்த நீர் போல தான் இருக்கும்.

உயிரோடு இருந்திருப்பார்

உயிரோடு இருந்திருப்பார்

முதலமைச்சர் அதிகாரங்களை கவனித்து வந்த ஓபிஎஸ் ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு சென்று உரிய மருத்துவ சிகிச்சை அளித்திருந்தால் உயிரோடு இருந்திருப்பார். ஆறுமுகசாமி ஆணையமும் அதையே தான் தெரிவித்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த போது, எதிர்த்து ஓட்டு போட்டவர் ஓபிஎஸ், உப்பிட்டவருக்கு துரோகம் செய்தவர் ஓபிஎஸ்.

விளம்பர ஆட்சி

விளம்பர ஆட்சி

சென்னையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.முதல்வர் தொகுதியை யாரும் படம் பிடிக்க முடியாது. எதிர்கட்சிகளை மட்டுமல்ல, 4-வது தூணையும் திமுக மிரட்டுகிறது. திமுக ஆட்சிக்கு வெளிப்படை தன்மை இல்லை, மழை பெய்யும் போது சாலை அமைக்கிறது அரசு. பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் அரசு துரிதமாக செயல்பட வேண்டும். அம்மா மருந்தகத்தின் மூலம் திமுக அரசு எந்த பயனையும் செய்வதில்லை, ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. அரசு மக்களின் உயிரை பற்றி பொருட்படுத்தாமல் உள்ளது.

ஆவின் பால் விலை

ஆவின் பால் விலை

சொத்து வரியை ஏற்றிய அரசு எந்தவித அடிப்படை வசிதியையும் செய்யவில்லை. ஆவின் பால் பாக்கெட் விலை உயர்வு திமுக அரசு மக்களுக்கு வழங்கிய பரிசு. தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை திமுக அரசு நிறுத்தியுள்ளது. விளம்பரத்தாலேயே ஆட்சி உள்ளது. பொய்களாலேயே ஆட்சி நடக்கிறது." என கடுமையாக விமர்சித்தார்.

English summary
Former AIADMK Minister Jayakumar said that Jayalalithaa would have survived if Sasikala had been taken abroad and given medical treatment when she was the power, and ops as Chief Minister.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X