டெல்லி சென்ற செங்கோட்டையன்.. நிர்மலா சீதாராமனுடன் ரகசிய சந்திப்பு.. குழம்பும் அதிமுக.. என்ன நடந்தது?
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பாக செங்கோட்டையன் டெல்லிக்கு பயணித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருந்தார். இந்த நிலையில் திடீரென செங்கோட்டையன் டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பது அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் அரங்கேறி வருகின்றன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடு எழுந்தன. அதேபோல் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் செங்கோட்டையன் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார். அதேபோல் எடப்பாடி பழனிசாமி பெயரையும் கூறாமல் இருந்தார்.

இபிஎஸ் vs செங்கோட்டையன்
சட்டசபை கூட்டத்தில் கூட செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இடையில் சுமூக நிலை ஏற்படவில்லை. அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்திலும் பங்கேற்காமல் தவிர்த்தார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேசுகையில், செங்கோட்டையன் ஏன் பேசவில்லை என்று அவரிடமே கேளுங்கள் என்று பதில் அளித்து அதிர்ச்சி கொடுத்தார். இதன் மூலமாக எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையில் மோதல் இருப்பது தெரிய வந்தது.
அமித் ஷா - இபிஎஸ் சந்திப்பு
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அதிமுக அலுவலகத்தை பார்ப்பதற்காக டெல்லிக்கு சென்றதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, 3 கார்கள் மாறி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அவருடன் சிவி சண்முகம், கேபி முனுசாமி, தம்பிதுரை உள்ளிட்ட நிர்வாகிகளும் இருந்தனர்.
டெல்லி சென்ற செங்கோட்டையன்
இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமையும் என்று பார்க்கப்பட்டது. அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு தரப்பும் இதனை உறுதி செய்யாத நிலையில், அதிமுகவில் பரபரப்பான சூழல் இருந்து வந்தது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் செங்கோட்டையன், திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்காமல் இருந்த செங்கோட்டையன், திடீரென டெல்லிக்கு பயணித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். டெல்லி சென்ற செங்கோட்டையன் மத்திய நிர்மலா சீதாராமனை சந்தித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
குழம்பும் அதிமுக
மதுரையில் இருந்து டெல்லி சென்ற செங்கோட்டையன், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துவிட்டு உடனடியாக தமிழ்நாடு திரும்பி இருக்கிறார். இதனால் அதிமுகவினர் இடையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் டெல்லி சென்றுவிட்டு செங்கோட்டையன் அவசரமாக தமிழ்நாடு திரும்பி வருவதற்கான காரணம் என்ன என்று அரசியல் விமர்சகர்களும் விவாதித்து வருகின்றனர்.
-
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
“திமுக - அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க சதி திட்டம் தீட்டியது யார்?” ஸ்டாலினுக்கு செங்கோட்டையன் கேள்வி -
பெரிய புள்ளியாச்சே அவரு! துரோகி பட்டம்.. எடப்பாடியால் வேதனையில் வேலுமணி! அண்ணாமலையுடன் ஐக்கியம்? -
செங்கோட்டையன் டக்னு விஜய் பாலாஜியை கட்டிப்பிடித்து, "தட்டி எறிஞ்சு கலக்கிட்டீங்களாமே"! அமைச்சர் குஷி -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications