சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நள்ளிரவில் பரபரப்பு! ஜெயலலிதா படம் இடம் பெற்றிருந்த.. அதிமுக பொதுக்குழு பேனர்கள் கிழிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு இறுதிகட்ட பணிகள் நடைபெறும் நிலையில், விழா நடைபெறும் இடத்தின் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    AIADMK பொதுக்குழுக்கூட்டம் | ரத்தக்களறியான ராயப்பேட்டை | EPS VS OPS

    அதிமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 11) வானகரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    பொதுக்குழுக் கூட்டத்திற்குத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் நாளை காலை நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.

     கோவா காங். எம்எல்ஏக்கள் 5 பேர் தலைமறைவு? எதிர்க்கட்சி தலைவரே பாஜக உடன் தொடர்பு? காங். முக்கிய ஆக்ஷன் கோவா காங். எம்எல்ஏக்கள் 5 பேர் தலைமறைவு? எதிர்க்கட்சி தலைவரே பாஜக உடன் தொடர்பு? காங். முக்கிய ஆக்ஷன்

    அதிமுக பொதுக்குழு

    அதிமுக பொதுக்குழு

    வழக்கு ஒருபுறம் என்றாலும் கூட மறுபுறம் பொதுக்குழுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வானகரம் தனியார் மண்டபத்தில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு பிரம்மாண்டமான திடல்கள் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவுக்கும் செயற்குழுவுக்கும் இரண்டு மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தீர்மானங்கள்

    தீர்மானங்கள்

    கடந்த பொதுக்குழுவிலேயே ஒற்றை தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவு காரணமாக புதிய தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இன்று பொதுக்குழுக் கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தற்காலிக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

    பேனர்கள்

    பேனர்கள்

    நேற்று மாலை தான் பொதுக்குழு நடைபெறும் இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி இருந்தனர். பொதுக்குழுவுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் மண்டபம் வரை அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் இடம் பெற்றுள்ளன. அதேநேரம் ஒ.பன்னீர்செல்வத்தின் படங்கள் எங்கும் இடம் பெறவில்லை.

    கிழிப்பு

    கிழிப்பு

    இந்தச் சூழலில் அதிமுக பொதுக்குழுவுக்கு வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அண்ணா, ஜெயலலிதா, முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் ஃபோட்டோக்கள் இடம் பெற்று இருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் யாரும் இல்லாத சமயத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் பொதுக்குழுக் கூட்டத்துக்காக வைக்கப்பட்டிருந்த 30க்கும் மேற்பட்ட பேனர்களை கிழித்து உள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தீர்ப்பு

    தீர்ப்பு

    அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி தொடர்பப்ட்ட வழக்கில் காலை 9 மணியளவில் நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது. நீதிமன்ற தீர்ப்பு பாசிட்டிவாக வரும்பட்சத்தில் சற்று நேரத்திலேயே பொதுக்குழு கூட்டத்தைத் தொடங்க எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளது. மேலும், வெளியாட்கள் பொதுக்குழுக் கூட்டத்தில் நுழையாமல் இருக்கவும் ஸ்கேனர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    English summary
    Jayalalitha banner teared by unidentified persons in midnight: (அதிமுக பொதுக்குழு பேனர் கிழிப்பு) AIADMK General Committee meeting banner teared.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X