எடப்பாடி பழனிச்சாமிக்கு எதுவுமே சாதகமில்லை.. காரணத்தை அன்றே கணித்து எழுதிய எண் கணித நிபுணர்
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி 2வது முறையாக கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது என ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமற்ற நாளில் பொதுக்குழு கூட்டப்படுவதாகவும் அது அவருக்கு பாதகத்தையே தரும் என்று ஏற்கனவே நமது ஒன் இந்தியாவில் பிரபல எண் கணித நிபுணர் டாக்டர் ஜெ.என்.எஸ் செல்வன் கணித்து எழுதப்பட்டிருந்தது அதை மீண்டும் பார்க்கலாம்.
Recommended Video
நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதிமுக 200 ஆண்டுகள் இருக்கும் என்று சொன்னார் ஜெயலலிதா. அவர் மறைந்து சில ஆண்டுகளிலேயே கட்சியில் தலைமைப்பதவிக்கான மல்லுக்கட்டு ஆரம்பித்து விட்டது.
அதிமுகவின் தலைவர் யார் என்று தொண்டர்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இரட்டை தலைமைக்கு இடையே ஏற்பட்ட போட்டியே ஒற்றைத்தலைமையைப் பற்றி பேச வைத்தது. எடப்பாடி பழனிச்சாமியா? ஓ.பன்னீர் செல்வமா? ஒற்றைத்தலைமை யார் என்ற கேள்வி எழுந்தது.

அதிமுக பொதுக்குழு
அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதியன்று முதலில் கூட்டப்பட்ட பொதுக்குழு ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமாக அமைந்தது. ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு மீண்டும் கூட்டப்பட்டது. அந்த பொதுக்குழு கூட்டத்தில் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அதே நாளில் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். பெரும்பான்மையானவர்கள் ஆதரவும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவும் எடப்பாடி பழனிச்சாமிக்கே உள்ளது.

எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக
அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் 1972ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி அதிமுக என்ற கட்சியை அறிவித்தார். அவருக்குப் பிறகு இரண்டாம் கட்ட தலைவர்களை அவர் உருவாக்கவில்லை. மூன்று முறை முதல்வராக இருந்து கட்சியை வழி நடத்தினார் 1987ஆம் ஆண்டு உடல் நலக்குறைவினால் மரணமடைந்தார். எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு யார் தலைவர் என்ற போட்டியில் கட்சி பிளவு பட்டது.

ஜெயலலிதா - சசிகலா
1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா தனது வலிமையை நிரூபித்து கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என்று அவரது தொண்டர்களால் கொண்டாடப்பட்டார். அடுத்தடுத்த வெற்றிகள் சில சறுக்கல்கள் ஏற்பட்டாலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் எதிரிகளே இல்லை என்று ஜெயலலிதா பேசினார். 2016ஆம் ஆண்டு உடல் நலக்குறைவினால் மரணமடைந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவிற்குப் பிறகு அவரது நிழல் போலவே இருந்த சசிகலாவை கூட அவர் வளர்த்து விடவில்லை. தானாவே பொதுச்செயலாளர் என்று அறிவிக்கச் சொல்லியும் அந்த பதவி நிலைக்கவில்லை. ஓ.பன்னீர் செல்வத்தையும், எடப்பாடி பழனிச்சாமியையும் நன்கு வளர்த்து விட்டவர் சசிகலாதான்.

ஓபிஎஸ், இபிஎஸ்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பிளவு பட்ட கட்சி சில மாதங்களில் மீண்டும் ஒற்றிணைந்தது. சசிகலாவை ஒதுக்கி வைத்து விட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியை எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர் செல்வமும் உருவாக்கினர். ஒற்றைத்தலைமை விவகாரம் அதிமுக கட்சியில் பூதாகரமாக உருவெடுத்தது.

அதிமுக பொதுக்குழு
அதிமுகவினால் முதலில் ஜூன் 23ஆம் தேதியன்ற கூட்டப்பட்ட பொதுக்குழு ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமாக அமைந்தது. கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டது. அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக இருந்தாலும் இறுதியில் ஓ.பன்னீர் செல்வத்திற்கே சாதகமாக அமையும் என்று கணித்திருந்தார் எண் கணித நிபுணர் ஜெஎன்எஸ் செல்வன்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமில்லை
ஆள் செய்யாததை நாள் செய்யும் என்று சொல்வார்கள். 11/07/2022 என்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமில்லை. அதிமுக பொதுக்குழு எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவைத் தரும். காரணம் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் 12/05/1954 கூட்டுக்தொகை 9 வருகிறது. 12 கூட்டுத்தொகை 3 வருகிறது. பொதுக்குழு கூட்டுத்தொகை உள்ள எண் 11 கூட்டுத்தொகை 2 வருகிறது. 11/07/2022 கூட்டுத்தொகை 6. இந்த எண்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமற்ற எண்களான 2,6,8ல் வருகிறது.

ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகம்
பொதுக்குழு நடைபெறும் ஸ்ரீவாரு வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தின் பெயர் எண் கூட்டுத்தொகை 104. இந்த மண்டபத்தில் நடைபெறும் பொதுக்குழு ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமாக அமைந்தது. காரணம் ஓ.பன்னீர் செல்வம் பிறந்த தேதி 14 கூட்டுத்தொகை 5. மண்டபத்தின் கூட்டுத்தெகை 104 கூட்டினால் 5 வருகிறது. இது ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமே.

ஓ.பன்னீர் செல்வம்
ஜூலை 11 என்பது ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமான நாள். எனவே அந்த நாளில் பொதுக்குழு நடைபெற்றது. ஓ.பன்னீர் செல்வத்தின் பெயர் எண் 6 எனவே பொதுக்குழு நடைபெறும் தேதியின் கூட்டுத்தொகையும் சாதகமாகவே உள்ளது. பல பலன்களை ஓபிஎஸ்க்கு சாதகமாக கிடைக்கப்போகிறது. இந்த சாதகம்தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாதகத்தை தரப்போகிறது எனவும் எண் கணித நிபுணர் ஜெ.என்.எஸ் செல்வன் கணித்திருந்தார்.

எடப்பாடிக்கு எதுவும் சாதகமில்லை
தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேதி, வாக்கு எண்ணிக்கை அனைத்துமே எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமற்றதாகவே இருந்தன. இதற்குக் காரணம் அந்த எண்களின் கூட்டுத்தொகை, 6, 2 என வந்ததுதான். எனவே பொதுக்குழுவும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமற்ற நிலையில் உள்ளது என்றும் கணித்திருந்தார் டாக்டர் ஜெ.என்.எஸ் செல்வன். அவர் கணித்தது போலவே இப்போது உயர்நீதிமன்றம் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சாதகமான தீர்ப்பை வழங்கியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்த தீர்ப்பு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
-
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
அதிமுக வேட்பாளர் பட்டியல்.. தொகுதி மாறிய முக்கிய தலைகள்.. மாஜி அமைச்சர்கள் புதிய வியூகம்! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி!












Click it and Unblock the Notifications