Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக ஜூலை11 பொதுக்குழு தீர்மானங்கள் அத்தனையும் செல்லும்.. ஹைகோர்ட்டில் மாஸ் காட்டிய இபிஎஸ் வாதம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என்ற எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்களை சென்னை உயர்நீதிமன்றம் முழுமையாக ஏற்றுக் கொண்டது. இதனடிப்படையில் அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என தீர்ப்பளித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்

கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை நியமித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் மற்றும் ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

AIADMK general council resolutions case Verdict- Details of EPS Faction Arugments in High court

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என மார்ச் 17ம் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

கட்சி விதிகளை திருத்த பொதுக்குழுவிற்கு அதிகாரம் இருந்தாலும், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்ய பொதுக்குழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை. ஜெயலலிதா மரணத்திற்கு பின்பு 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில், ஜெயலலிதாவை கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் என அறிவித்ததுடன், பொதுச்செயலாளர் பதவியை கலைத்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதாகவும், திருத்தப்பட்ட இந்த விதியின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பதவிக் காலம் 2026வரை உள்ளது என்ற அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். ஒருவருக்காக மட்டுமே தேர்தல் நடத்தப்படுகிறது. தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் இடைக்கால பொதுச்செயலாளர் அறிவிப்பையும் ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. தீர்மானத்தை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும். கட்சி விதிகளின் படி 7 நாட்கள் நோட்டீஸ் வழங்காமல் கடந்த 17 ம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுச்செயலாளர் தேர்வுக்கான தேர்தலை நடத்துங்கள், ஆனால் முடிவை தீர்ப்பு வரும் வரை அறிவிக்க கூடாது என உத்தரவிட்டு வழக்கு மார்ச் 22ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கு கடந்த மார்ச் 22-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது இபிஎஸ் மற்றும் அதிமுக சார்பில் முன்வைக்கப்பட்ட வாதம்:
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், பன்னீர்செல்வம் ஆகியோர் சுயேட்சை வேட்பாளர்களாக சட்டமன்ற கூட்டத் தொடரில் கலந்து கொள்ளலாம். பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக இருந்த போது அவரின் சகோதரர் ராஜாவை எந்த விளக்கமும் அளிக்காமல் எந்த அடிப்படையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கனார் என காரணம் கூறவில்லை. எந்த வகையில் எல்லாமல் வழக்கு தொடர முடியோ? அந்த வகையில் பன்னீர் செல்வம் செயல்பட்டு வருகிறார்.

பொதுக்குழுவின் முடிவு இறுதியானது. அதில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது. பொதுக்குழுவுக்கு அனைத்து அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் பொதுக்குழு முடிவுக்கு கட்டுப்பட்டவர்கள் தான். 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று அடுத்த பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு, பொதுச்செயலாளர் பதவி ஏற்படுத்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பன்னீர் செல்வத்தை நீக்குவதற்கான முகாந்திரமும், போதுமான காரணங்களும் இருந்ததால் ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர் பொறுப்பிலிருந்து பொதுக்குழுவால் நீக்கப்பட்டார்.

கட்சி உள்விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. அதிமுக அரசு நிறுவனம் கிடையாது, விதிகளை அப்படியே கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்த முடியாது. உறுப்பினர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அவ்வபோது விதிகள் மாற்றி அமைக்க கட்சிக்கு உரிமை உள்ளது. ஒருங்கிணைப்பாளர் பதவிகள் கலைக்கப்பட்ட பின், காலியிடம் ஏற்படாமல் இருக்கவும், கட்சியை வழிநடத்தவும் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி தோற்றுவிக்கப்பட்டது.

1972ல் எம்.ஜி.ஆர் தோற்றுவித்த அதிமுகவில் 47 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு 2017ல் விதிகள் மாற்றப்பட்டது. அதன்படி, 2017ல் ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை உருவாக்கப்பட்டு பொதுக்குழு முடிவு எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டது. 2022ல் மீண்டும் முதன்மை உறுப்பினர்களே பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க பொதுக்குழுவில் அதிகாரம் வழங்கப்பட்டது. இரண்டு தலைமைகளால், உடனடியான சரியான முடிவுகள் எடுக்க முடியவில்லை. அதனால் கட்சியை சரியாக வழிநடத்தவே ஒருங்கிணைப்பாளர் பதவி கலைக்கப்பட்டு, இடைக்கால பொதுச்செயலாளர் பதவி தற்காலிகமாக உருவாக்கப்பட்டது.

இவ்வாறு இபிஎஸ் தரப்பு முன்வைத்த விரிவான வாதங்களை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. இதனடிப்படையில் அதிமுகவின் ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று மிக முக்கியமான அதிரடித் தீர்ப்பை வழங்கி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+