அதிமுக ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்- ஓபிஎஸ் முன்வைத்த வாதங்கள் அனைத்தும் தவிடு பொடி!
சென்னை: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது உள்ளிட்ட ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பு முன்வைத்த அத்தனை வாதங்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டது.
கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை நியமித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் மற்றும் ஜே..சி.டி.பிரபாகர் ஆகியோர் தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என மார்ச் 17ம் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இந்த தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

கட்சி விதிகளை திருத்த பொதுக்குழுவிற்கு அதிகாரம் இருந்தாலும், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்ய பொதுக்குழுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை. ஜெயலலிதா மரணத்திற்கு பின்பு 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில், ஜெயலலிதாவை கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் என அறிவித்ததுடன், பொதுச்செயலாளர் பதவியை கலைத்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதாகவும், திருத்தப்பட்ட இந்த விதியின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பதவிக் காலம் 2026வரை உள்ளது என்ற அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில், பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். ஒருவருக்காக மட்டுமே தேர்தல் நடத்தப்படுகிறது. தீர்மானங்களை எதிர்த்த வழக்கில் இடைக்கால பொதுச்செயலாளர் அறிவிப்பையும் ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. தீர்மானத்தை எதிர்த்த வழக்கில் தீர்ப்பு வரும் வரை பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும். கட்சி விதிகளின் படி 7 நாட்கள் நோட்டீஸ் வழங்காமல் கடந்த 17 ம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுச்செயலாளர் தேர்வுக்கான தேர்தலை நடத்துங்கள், ஆனால் முடிவை தீர்ப்பு வரும் வரை அறிவிக்க கூடாது என உத்தரவிட்டு வழக்கு மார்ச் 22ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கு கடந்த மார்ச் 22-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் சார்பில் ஓபிஎஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்:
1972ம் ஆண்டு துவங்கப்பட்ட அதிமுகவில் 1977 முதல் உறுப்பினராக பன்னீர் செல்வம் உறுப்பினராக உள்ளார். 2017 பொதுக்குழுவால் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட பன்னீர்செல்வம் 2026 டிசம்பர் வரை பதவியில் தொடர உரிமை உள்ளது. 2022ல் நடந்த பொதுக்குழு அடிப்படை உறுப்பினர்கள் தலைமை பொறுப்புக்கு வருவதை தடுக்கும் வகையில் முதன்மை உறுப்பினர்கள் மட்டுமே வாக்களிக்க வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து, சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அனுமதித்தது. வங்கி கணக்குகள், உறுப்பினர்கள் நியமனம், புதிய திட்டங்கள், தேர்தலில் வேட்பாளர்களை போட்டியிட அனுமதிப்பது என அனைத்திலும் முடிவெடுக்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்க செயற்குழு அனுமதி அளித்துள்ளது.
பொதுக்குழுவுக்கு அதிகாரமா? தலைமை கழகத்துக்கு அதிகாரமா? யார் பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் உள்ளது என கட்சி விளக்கவில்லை. திமுகவுடன் இணைந்தும், திமுகவின் செயலை பாராட்டும் விதமாக செயல்பட்டதாலும், தனது சொந்த லாபத்திற்காக பல கோடிகள் செலவு செய்து செயல்படுவதாலும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து, கட்சியின் நன்மைக்காக அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது சட்டவிரோதம்.
கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன் தனது தரப்பு விளக்கத்தை அளிக்க ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை. திட்டமிட்டு ஒருவரின் நலனுக்காக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கட்சி விதி 5ன்படி, உறுப்பினர்களை நீக்க ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே உள்ளது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முன், கட்சியின் 2 பங்கு உறுப்பினர்கள் அனுமதி அளிக்க வேண்டும். சுய விளக்கம் கேட்க வேண்டும். முதலில் தற்காலிக நீக்கம் செய்ய வேண்டும். பின்னர் நீக்கம் செய்யலாம். அனைத்தும் பொதுக்குழுவில் மீறப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகாலம் 2026ல் முடியும் வரை இந்த அதிகாரம் தொடரும். இடையில் பதவியை கலைக்க முடியாது.
ஒருங்கிணைப்பாளர் பதவிகாலம் முடிந்த பின் புதிய பதவிகள் ஏற்படுத்துவதை எதிர்க்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். அதற்காக முதலில் பன்னீர் செல்வம் நீக்கம், பின்னர், விதிகளில் புதிய திருத்தம் செய்து எடப்பாடிக்கு எதிரானவர்கள் நீக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமியை தேர்ந்தெடுக்க திட்டமிட்டு பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 4 மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என பொதுக்குழுவில் அறிவித்துவிட்டு இதுவரை நடத்தவில்லை. பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து கருத்து தெரிவிப்பதற்கும், எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லலை. இவ்வாறு ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கில்தான் இன்று தீர்ப்பு வழங்கியது சென்னை உயர்நீதிமன்றம். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது; அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது உள்ளிட்ட ஜூலை 11 பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு அதிரடி தீர்ப்பு வழங்கினார்.
-
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஷாக் கொடுத்த வேலுமணி.. அதிமுகவுக்கு தாவிய திமுக கவுன்சிலர்! -
"சிதமுக-விற்கு லக்".. அதிமுக கூட்டணியில் புதிய கட்சி.. ஒரு தொகுதியை ஒதுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்!












Click it and Unblock the Notifications