2 வருடத்திற்கு பின் கூடும் அதிமுக பொதுக்குழு.. இன்று சசிகலாவுக்கு காத்திருக்கும் மாபெரும் அதிர்ச்சி!
அதிமுக கட்சியில் இருந்து சசிகலாவை மொத்தமாக நீக்கும் வகையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்படலாம், அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தகவல் வந்துள்ளது.
சென்னை: அதிமுக கட்சியில் இருந்து சசிகலாவை மொத்தமாக நீக்கும் வகையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்படலாம், அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக இன்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வருகிறது.
அதிமுகவில் கடைசியாக 3 வருடங்களில் நடந்த இரண்டு பொதுக்குழு கூட்டங்களும் மிக முக்கியமானது ஆகும் . 2016ல் சசிகலா தலைமையில் ஒரு பொதுக்குழு கூட்டம் நடந்தது. அதன்பின் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2017ல் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
இதில் 2016ல் சசிகலா முக்கியமான அறிவிப்புகள் பலவற்றை வெளியிட்டார். அதோடு அவர் கட்சியில் துணை பொதுச் செயலாளராக தினகரனை அறிவித்தார்.

மொத்தமாக நீக்கினார்கள்
ஆனால் அதற்குள் ஓ. பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் செய்து, ஆட்சியில் பெரிய சிக்கல் வந்து எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார். அதன்பின் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ. பன்னீர்செல்வம் அணி ஒன்றாக இணைந்தது. இதையடுத்து 2017ல் அந்த முக்கியமான பொதுக்குழு கூடியது.

என்ன குழு
அதன்பின் 2017ல் நடந்த பொதுக்குழுவில், அதிமுகவில் இருந்து பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டது. சசிகலாவின் பொறுப்பு நீக்கப்பட்டதோடு அவரின் அறிவிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. கட்சியில் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் இனி முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டார். துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.

இன்று மீண்டும்
இந்த நிலையில் 2 வருடங்களுக்கு பின் இன்று மீண்டும் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. சென்னை இராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் கூட்டம் நடக்க உள்ளது. அதிமுக கட்சியில் இருந்து சசிகலாவை மொத்தமாக நீக்கும் வகையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்படலாம், அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தகவல் வந்துள்ளது. இது தொடர்பாக இன்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வருகிறது.

ஏன் அப்படி
அதன்படி சசிகலா இன்னும் சில மாதங்களில் சிறையில் இருந்து வெளியே வரலாம். அவர் வந்தால் டிடிவி தினகரன் போல பிரச்சனை செய்ய முயற்சிக்கலாம். கட்சிக்கு உரிமை கொண்டாடலாம். அதனால் அதற்கு முன் மொத்தமாக அவரை நீக்கிவிட்டால் கட்சியை காப்பாற்றலாம் என்று அதிமுக இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications