அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிடவும் தடையில்லை- சென்னை ஐகோர்ட் உத்தரவு
சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிடவும் தடையில்லை என்று அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக சில ஆண்டுகள் ஓபிஎஸ், எடப்பாடி இரட்டை தலைமையின் கீழ் கட்சி செயல்பட்டது. இப்போது கடந்த சில மாதங்களாகவே இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து உரசல் நிலவி வருகிறது.
ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தனித்தனியாகவே செயல்பட்டனர். இதற்கிடையே கடந்தாண்டு ஜூலை 11இல் நடந்த அதிமுக பொதுக்குழு பேசுபொருளானது.

அதிமுக
அதில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டு, எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும், தனது அனுமதி இல்லாமல் கூடிய இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓ பன்னீர் செல்வம் தரப்பு நீதிமன்றத்திற்குச் சென்றது. இந்த விவகாரத்தில் இதுவரை எடப்பாடிக்குச் சாதகமாகவே தீர்ப்புகள் வந்துள்ளன. இதனால் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்த நிலையில், அவரை பொதுச்செயலாளராக அறிவிக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த அறிவிப்பை நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் வெளியிட்டார். இரு நாட்கள் வேட்புமனு பெறப்பட்ட நிலையில், மார்ச் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் அதற்கு மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளியாகும் அறிவிக்கப்பட்டது. அதிமுக அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து பொதுச்செயலாளரைத் தேர்வு செய்யவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டது.

இடைக்கால பொதுச்செயலாளர்
இரு நாட்களில் எடப்பாடி பழனிசாமியை தவிர யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதனால் எடப்பாடி போட்டியின்றி தேர்வாகும் சூழல் உருவானது. இருப்பினும், ஓபிஎஸ் தரப்பு பொதுச்செயலாளர் தேர்தலுக்குத் தடை கோரி வழக்குப் போட்டது. இது அவசர வழக்காகக் கடந்த வாரம் விசாரணைக்கு வந்த நிலையில், தேர்தல் நடைமுறைகளைத் தொடரலாம் இருப்பினும், முடிவுகளை வெளியிடத் தடையில்லை என்று அறிவித்திருந்தது.

தடையில்லை
இந்தச் சூழலில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பளித்தார். மேலும், தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என்று அவர் உத்தரவிட்டிருந்த நிலையில், இப்போது அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை வெளியிடவும் தடையில்லை என்று அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications