கிளம்பிய பூதம்.. ஆவின் நிறுவனத்தில் பணியாட்களைச் சேர்த்ததில் முறைகேடு.. லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை
சென்னை: கடந்த ஆட்சி காலத்தில் ஆவின் பால் நிறுவனத்தில் பணியாளர் சேர்க்கை நடைபெற்றதில் பல கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தின் போது.. அதிலும், குறிப்பாக கடைசி மூன்று ஆண்டுகளில் ஆவின் நிறுவனத்தில் பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் அதிக முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

பணியிடங்கள்
236 பணியிடங்களுக்கு நடைபெற்ற நியமனத்தில் பணம் வாங்கிக்கொண்டு நியமன நடைபெற்ற முறைகேடுகள் அரங்கேறி உள்ளதாக இப்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஐஏஎஸ் அதிகாரிகள்
இது தொடர்பாக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பால்வளத் துறை இயக்குனர் பரிந்துரை செய்துள்ளார். 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் வர இருக்கிறார்கள். முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேர் இதில் அடக்கம் என்று ஆவின் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல கோடி பணப் புழக்கம்
பணியாளர் நியமனத்தில் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே இதை தோண்டித் துருவ லஞ்ச ஒழிப்புத்துறை முழுவீச்சில் களம் இறங்க உள்ளது.

பரபரப்பில் ஆவின்
இதனால் கடந்த ஆட்சி காலத்தில், அதுவும் குறிப்பாக கடைசி நேரத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள் மட்டும் அவர்களை பணிக்கு அமர்த்தியவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
-
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வேலை.. வேளாண்மை அலுவலர் பதவி! அப்ளை பண்ணுவது எப்படி? -
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை.. 27,000 சம்பளம்.. 8ம் வகுப்பு, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications