அதிமுக மெம்பர்ஷிப்! 100 நாள் வேலை பணியாளர்கள் டூ மாணவர்கள்! கையில் படிவத்துடன் சுற்றும் ர.ர.க்கள்!
சென்னை: அதிமுக உறுப்பினர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வயல் காட்டில் வேலை செய்பவர்கள் முதல் மாணவர்கள் வரை ஒருவர் விடாமல் உறுப்பினராக்கும் பணிகளில் அக்கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
புதிய உறுப்பினர் சேர்க்கை விவகாரத்தில் திமுக நிர்வாகிகளோடு ஒப்பிடும் போது அதிமுக நிர்வாகிகள் குக்கிராமங்கள் வரை சற்று இறங்கியே களமாடுகிறார்கள் என்று சொல்லலாம்.

அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கு நிர்ணயித்த எடப்பாடி பழனிசாமி அதற்கான பொறுப்பை கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி மாவட்டச் செயலாளர்கள் வசம் கொடுத்தார். இந்நிலையில் இதுவரை அதாவது கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 1 கோடியே 60 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேருவதற்கு விண்ணப்பித்துள்ளதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எஞ்சியுள்ள 40 லட்சத்தையும் நிறைவு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள எடப்பாடி பழனிசாமி அது குறித்துநேற்றைய தினம் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கட் அண்ட் ரைட்டாக பேசியிருக்கிறார். இதையடுத்து இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தருமாறு ஒரு சில மாவட்டச் செயலாளர்கள் கேட்டிருக்கின்றனர்.
அதன் அடிப்படையில் உறுப்பினர்கள் சேர்ப்பதற்கும், உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்குமான காலக் கெடுவை ஜூலை 19ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இதனால் வயல்வெளிகளில் வேலை பார்ப்பவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அதிமுகவில் உறுப்பினராக சேர்த்துவிட வேண்டும் என்ற முனைப்பில் அக்கட்சியில் கையில் படிவத்துடன் சுற்ற ஆரம்பித்துள்ளனர்.
தனது தலைமையை ஏற்று 2 கோடி உறுப்பினர்கள் அதிமுகவில் உள்ளார்கள் என்பதை மதுரை மாநாட்டில் பெருமிதத்துடன் அறிவிக்கும் திட்டத்தில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
-
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ் -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்!












Click it and Unblock the Notifications