"நடு ரோட்டில் வைத்து மன்னிப்பு கேட்ட விஜய் சிங்கமா?” அதிமுக சரமாரி அட்டாக்!
சென்னை: தவெக தலைவர் விஜய் இன்று நடைபெற்ற மாநாட்டில் அதிமுகவை சீண்டிய நிலையில், அக்கட்சியினர் விஜய்க்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். "நடு ரோட்டில் வைத்து மன்னிப்பு கேட்ட விஜய் சிங்கமா?" என அதிமுக காட்டமாக விமர்சித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம் பாரபத்தியில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய் தன்னை சிங்கம் எனக் குறிப்பிட்டுப் பேசினார். மேலும் பேசிய அவர், "பாசிச பாஜகவுடன் தமிழகத்தில் ஒரு கட்சி நேரடியாக கூட்டணி வைத்துள்ளது. பொருந்தா கூட்டணி என்பதால் மற்றொரு கட்சி மறைமுகமாக கூட்டணி வைத்துள்ளது.

அதிமுகவை சீண்டிய விஜய்
அந்தக் கூட்டணிக்குச் செல்ல நாம் என்ன ஊழல் கட்சியா? மக்கள் சக்தியே நம்முடன் அணியா அணியா திரண்டு இருக்கும்போது இந்த அடிமை கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் நமக்கு எதுக்கு? நம்முடைய கூட்டணி சுயமரியாதை கூட்டணியாக இருக்கும்.
எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை கட்டிக்காப்பது யார்? எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி இப்போது எப்படி உள்ளது என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா? வெளியில் சொல்ல முடியாமல் அப்பாவி அதிமுக தொண்டர்கள் வேதனையுடன் தவிக்கிறார்கள்." எனப் பேசினார் விஜய்.
சிங்கம்ங்க…!
— Raj Satyen - SayYesToWomenSafety&AIADMK (@satyenaiadmk) August 21, 2025
யார் சொன்னது?அவரே சொல்லிகிட்டார்!🤦🏻♂️
கோடநாட்டில் நாள் முழுக்க காத்து கிடந்து,
கிளம்புங்க.. காத்து வரட்டும் என்ற சொன்ன பிறகு,
நடுரோட்டில் வைத்து மன்னிப்பு கேட்டது ,
ஞாபகமில்லை போல…
அதுவும் எதற்கு ..
சாதாரண ஒரு பட வெளியீட்டிற்கு!
அடிமை கூட்டணியாம்!… pic.twitter.com/7XQ2t86Inu
ராஜ் சத்யன் பதிலடி
இந்நிலையில், விஜய்யின் பேச்சுக்கு அதிமுக ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"சிங்கம்ங்க...!
யார் சொன்னது?அவரே சொல்லிகிட்டார்!
கோடநாட்டில் நாள் முழுக்க காத்துக் கிடந்து,
கிளம்புங்க.. காத்து வரட்டும் என்ற சொன்ன பிறகு,
நடுரோட்டில் வைத்து மன்னிப்பு கேட்டது,
ஞாபகமில்லை போல...
அதுவும் எதற்கு ..
சாதாரண ஒரு பட வெளியீட்டிற்கு!
அடிமை கூட்டணியாம்!
அடிமைத்தனத்தை பற்றி நீங்கள் பேசுகிறீர்களா?
உங்கள் படத்தின் 100 ருபாய் டிக்கெட்டை 500-1000 என விற்பதற்கு , நீங்கள் எழுதி கொடுத்த அடிமை சாசனங்களின் HISTORY-Geography பற்றி தொடர்ந்து பேசுவோம்" எனக் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி பதிலடி
அதிமுக குறித்த விஜய்யின் விமர்சனத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பதிலடி கொடுத்தார். "அதிமுக இப்போது யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள். அறியாமையின் காரணமாக பேசுவதாக பார்க்கிறேன். இதுகூட தெரியாமல் ஒரு கட்சிக்கு தலைவராக இருக்கிறார் என்று சொன்னால் அவரை நம்பி எப்படி தொண்டர்கள் இருப்பார்கள்? மரம் உடனே கனி தராது. அப்படித்தான் ஒரு இயக்கமும், எடுத்தவுடனே எந்த இயக்கமும் ஆட்சிக்கு வந்துவிட முடியாது.
அது தெரியாமல் சிலர் கட்சி ஆரம்பித்த உடனே இமாலய சாதனை படைத்தது போல பேசுகிறார்கள். மக்கள் செல்வாக்கு பெற்றதைப் போலவும், நாட்டுக்கு உழைத்தது போலவும், அவர்கள் வந்துதான் மக்களைக் காப்பாற்றப்போவது போலவும் சிலர் அடுக்குமொழியால் பேசிவருகிறார்கள். யாரென்று புரிந்துகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்." என்று பேசி இருந்தார்.
-
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
கட்டம் கட்டிய திமுக.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை.. கலங்கி வீடியோ வெளியிட்ட தவாக வேல்முருகன் -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக்












Click it and Unblock the Notifications