பரபர சூழலில் இன்று அதிமுக மா.செக்கள் கூட்டம்.. ராஜ்யசபா வேட்பாளரை தேர்வு செய்ய ஆலோசனை!
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று (மார்ச் 4) அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு குறித்து அதிமுக ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும், சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக இறுதி செய்து வருகிறது. ஒரு ஆண்டுக்கு முன்பே அதிமுக பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்த கூட்டணியை வலுப்படுத்த இரண்டு கட்சிகளும் தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றன.

குறிப்பாக கூட்டணி கட்சிகளை இணைப்பது, தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை உள்ளிட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இதுவரை பாமக, அமமுக தவிர வேறு எந்த ஒரு பெரிய கட்சிகளும் சேரவில்லை.
தமிழக பாஜக பொறுப்பாளராக உள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் எடப்பாடி பழனிசாமி உடன் ஆலோசனை மேற்கொண்டார். அதிமுக பாஜக கூட்டணியை பலப்படுத்துவது, தற்போதைய அரசியல் கள நிலவரம் குறித்தும், அதிமுக - பாஜக நிர்வாகிகள் கூட்டாக சேர்ந்து தேர்தல் நேரத்தில் பணியாற்றுவது குறித்து ஆலோசனை மேற்க்கொள்ளபட்டது.
ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து இருந்தார். எனினும் பாஜக -அதிமுக தலைவர்கள் இடையே மறைமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்துகொண்டு தான் உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் சார்பில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அதன்பிறகு, எடப்பாடி பழனிசாமி உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இதில் எந்த ஒரு உடன்பாடும் ஏற்படாததால் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அப்போது, அமித் ஷாவை சந்தித்துப் பேசினார்.
இந்த சூழலில், அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் பிற்பகல் 3.30 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளார்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளையுடன் நிறைவடையும் நிலையில் ராஜ்யசபா உறுப்பினர் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வு குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது. எனவே இன்றைய கூட்டம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்!












Click it and Unblock the Notifications