Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக மாநாடு முடிந்ததும் மறுநாள் செய்தியை பார்த்தீங்களா? கலாய்த்த அமைச்சர் உதயநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு மாநாடு எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு அதிமுகதான் உதாரணம் என்றும் கேலிக்கூத்து மாநாடாக அந்த மாநாட்டை நடத்தினார்கள் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-சமீபத்தில் மதுரையில் ஒரு மாநாடு நடைபெற்றது. ஒரு மாநாடு எப்படி நடக்க கூடாதே அதற்கு உதாரணமாக அந்த மாநாடு நடந்தது. கேலிக்கூத்து மாநாடாக அந்த மாநாட்டை நடத்தினார்கள். மாநாட்டில் ஏதாவது கருத்துக்கள் சொல்லப்பட்டதா? அந்த கட்சியின் வரலாறு சொல்லப்பட்டதா?.. அந்த இயக்கத்தின் கொள்கைகள் சொல்லப்பட்டதா?.. வெறும் கலை நிகழ்ச்சிகள்..

AIADMK is an example of how not to hold a Manadu: Minister Udayanidhi Stalin slams

ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்... சினிமா பாடல் நிகழ்ச்சிகள்.. மிமிக்கிரி நிகழ்ச்சிகள்.. இப்படி ஒரு மாநாட்டை யாரும் பார்த்ததுண்டா?.. ஏன் இந்த மாநாட்டை நடத்துகிறோம் என்று அதை நடத்தியவர்களுக்கும் தெரியவில்லை.. அந்த மாநாட்டில் கலந்துகொண்டவர்களுக்கும் தெரியவில்லை.. 20ம் தேதி அந்த மாநாடு நடந்தது. மறுநாள்.. அதாவது 21ம் தேதி செய்தித்தாளை எடுத்து பாருங்க..

புளி சாதம் நல்லா இருந்ததா தயிர்சாதமா? இது தான் அவர்களுடைய ஒரே விவாதம்... 2 நாட்களுக்கு முன்பு அதிமுக நிர்வாகி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், மாநாட்டுக்கு அழைத்து சென்ற என் மனைவியை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசாரும் விசாரித்து வருகின்றனர். முதலில் யாரை விசாரிக்க வேண்டும்.. ஜெயக்குமார் அவர்களை தான் முதலில் விசாரிக்க வேண்டும்.. ஏன் என்றால்.. மாநாட்டின் பொறுப்பாளர் அவர் தான்..

இப்படி ஒரு கேலிக்கூத்தான மாநாட்டுக்கு கோடிக்கணக்கில் செலவு.. அவர்கள் மாநாடு நடத்திய அதே தேதியில் நாம் நீட் தேர்வுக்கு எதிராக மிகப்பெரிய உண்ணாவிரத போராட்டம் நடத்தியிருந்தோம்.. நீட் விவகாரத்தில் என்னைத்தான் எல்லாரும் விமர்சிக்கிறார்கள்.. ஆமாம்.. நான் வாக்குறுதி கொடுத்தது உண்மை.. அதற்காக உண்மையாக நானும், முதல்வர் ஸ்டாலினும் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.. முதன் முதலில் நீட் தேர்வு எப்போது வந்தது.

மற்ற மாநிலங்களில் எல்லாம் முன்னதாகவே நீட் தேர்வு வந்தது. ஆனால் தமிழ்நாட்டில் அப்போது வரவில்லை. கலைஞர் தான் நுழைவுத்தேர்வை ரத்து செய்தார். கிராமத்து மாணவர்களுக்காக எண்டரன்ஸ் எக்ஸாம் வேண்டாம் என்று கூறினார். அதன் பிறகு காங்கிரஸ் ஆட்சியில் தான் நீட் தேர்வு வந்தது என்று குறை கூறுவார்கள்.. ஆமாம் வந்தது... ஆனால் தமிழ்நாட்டிற்கு அப்போது வரவில்லை..
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு வரவில்லை..

AIADMK is an example of how not to hold a Manadu: Minister Udayanidhi Stalin slams

ஜெயலலிதா இறந்த பிறகு எடப்பாடி ஆட்சியின் போது தான்.. மத்திய அரசை திருப்திப்படுத்துவதற்காக இந்த நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு வந்தது. முதல் மரணம் அரியலூர் மாவட்டத்தில் அனிதா.. எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் நாம் போராட்டம் நடத்தினோம்.. இப்போதும் நாம் தான் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறோம்..

எப்போது நீட் தேர்வு ரத்து செய்யப்படுகிறதோ.. அப்போது வரை நமது போராட்டம் தொடரும்.. அதுவரை இளைஞரணியின் போராட்டம் தொடரும்.. நீட் தேர்வை ரத்து செய்ய இந்த ஒரு உதயநிதியால் முடியாது.. இங்கே இருக்கும் அத்தனை பேரும், மாணவர்களும், இளைஞர்களும் உதயநிதியாக மாறி நீட் தேர்வுக்கு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.. இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+