மத்திய அமைச்சரவை விரிவாக்கம்.. அதிமுகவுக்கு 2 ஜாக்பாட்.. ஒன்று "இலவு காத்த கிளிக்கு".. இன்னொன்று?
சென்னை: மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின் போது தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு அமைச்சர் பதவி வழங்க பாஜக முடிவு செய்துள்ளது. அவர்களில் ஒருவருக்கான பதவி உறுதியாகிவிட்டது. இன்னொருவருக்கான பதவி குறித்து பிரதமரிடம் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த ஒருவர் ஓ பி எஸ் மகன் ரவீந்திரநாத் ஆவார். இவர் வேட்புமனு தாக்கல் செய்த போதே கல்வெட்டில் இவரது பெயர் பதிப்பு என கிட்டதட்ட வெற்றி உறுதி செய்யப்பட்டது.
இதை வைத்து தனது மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஓபிஎஸ் இருந்துள்ளார். இதுகுறித்து டெல்லி சென்று பேச்சுவார்த்தையும் நடத்தியதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் பலன் கிடைக்கவில்லை.

ஐக்கிய ஜனதா தளம்
இந்த நிலையில் மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்யவும் அதில் அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு வாய்ப்பு கொடுக்கவும் பாஜக முடிவு செய்துள்ளது. பொதுவாக 80 பேர் வரை மத்திய அமைச்சரவையில் இடம்பெறலாம். ஆனால் தற்போதோ 53 பேர் மட்டுமே அமைச்சர்களாக உள்ளனர்.

அதிமுக
சிலர் கூடுதல் பொறுப்புகளையும் கவனித்து வருகிறார்கள். இதனால் புதியவர்களுக்கு வாய்ப்பளித்தால் நிர்வாகம் நடத்த எளிதாக இருக்கும் என்பதால் பாஜக இந்த முடிவை எடுத்துள்ளதாம். இரு கட்சிகளுக்கும் தலா இரு இடங்களை கொடுக்க முடிவு செய்துள்ளதாம். அந்தப் பதவிகளுக்கான பெயர்களை பரிந்துரை செய்யுமாறு பாஜக, அதிமுகவிடமும் நிதிஷ் கட்சியிடமும் கேட்டிருந்தது.

தம்பிதுரை
அதன்படி ஒரு பதவியை ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்திற்கு கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மற்றொரு பதவியை தம்பிதுரைக்கு கொடுக்கவுள்ளது. ஆனால் பாஜகவை சில நேரத்தில் தம்பிதுரை விமர்சித்ததால் அவர் மீது மோடி அதிருப்தியில் உள்ளதால் இந்த பரிந்துரையை ஏற்க மாட்டார் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அமைச்சர் பதவி
நவநீத கிருஷ்ணனுக்கு கொடுக்கலாம் என்றால் அவரை விட நீண்ட காலமாக தம்பிதுரை அதிமுகவில் இருந்து வருகிறார். அதனால் அவரை விட்டுவிட்டு நவநீத கிருஷ்ணனுக்கு கொடுக்க அதிமுக மூத்த நிர்வாகிகள் ஒப்புக் கொள்ளவில்லையாம். இதனால் தம்பிதுரைக்கு அமைச்சர் பதவி கொடுக்க பிரதமர் மோடியிடம் இன்றைய தினம் ஓபிஎஸ்ஸும் ஈபிஎஸ்ஸும் தனியாக ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. கடந்த இரு ஆண்டுகளாக இலவு காத்த கிளியாக இருந்த மத்திய அமைச்சர் கனவு தற்போது பலிக்க போவதை எண்ணி ரவீந்திரநாத் பூரிப்பில் உள்ளாராம்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications