திமுக, விஜய் நம்பர் 1, 2.. மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் அதிமுக? எடப்பாடிக்கு பறந்து போன மெசேஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதிதாக கட்சி தொடங்கிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயால் கருத்து கணிப்பு நடத்த முடிகிறது.. நம்மால் செய்ய முடியாதா என்ற கேள்வி அதிமுகவில் எழுந்துள்ளதாம். நமக்கு சாதகமாக சர்வே வர வேண்டும்.. என்று எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகள் மெசேஜ் அனுப்ப தொடங்கி உள்ளார்களாம்.

தமிழகத்தில் 2026-ல் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி மும்பையைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சமீபத்தில் ஒரு சர்வே எடுத்துள்ளது. அந்த சர்வேயின் ரிசல்ட்டுகள் விஜய்யின் த.வெ.க.வுக்கு மிகப் பெரிய ஆதரவை தருவதாக இருக்கின்றன.

vijay tvk tamilaga vetri kazhagam

வெற்றிப் பெறும் இடங்கள், சதவீதம், மண்டல வாரியாக ஆதரவு, பெரும்பான்மை சாதிகளின் ஆதரவு என அனைத்திலும் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி ஆகியவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகிற வகையில் அந்த சர்வேயின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

சர்வே முடிவுகள்

இந்த சர்வே முடிவுகள் கடந்த 4 நாட்களாக சோசியல் மீடியாக்களிலும், பத்திரிகை மற்றும் ஊடகங்களிலும் பதிவாகியுள்ளது. சமூக ஊடகங்களில் த.வெ.க. தரப்பினர் பரப்பி வருகின்றனர். இது திமுக, அதிமுக இரு தரப்பையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறதாம். இதனை அடுத்து இரு கட்சிகளின் ஐ.டி. விங்குகளும் இந்த சர்வேயின் பின்னணி குறித்து துப்பறிந்து வருகிறது.

முதல் கட்டமாக , மும்பையில் அப்படி ஒரு நிறுவனம் இருக்கிறதா? ஆன் லைன் சர்வேவா? மக்களிடம் பேலட் பேப்பர் கொடுத்து எடுக்கப்பட்டதா? ஆன் லைன் சர்வே எனில் அதன் உண்மைத் தன்மை என்ன? என்பது குறித்தெல்லாம் ஆராயப்படுகிறதாம். சர்வேயில் சொல்லப்பட்ட பல முடிவுகள், சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அரசியல் விமர்சகர்களிடத்தில் இருக்கிறது.

விசாரணை

வன்னியர் சமுகத்தில் பாமகவுக்கு செல்வாக்கு இல்லாத போலவும் திமுக அதிமுகவை கடந்த த.வெ.க.வுக்குத்தான் பெரும்பான்மை ஆதரவு இருப்பது போலவும் காட்டப்படுகிறது. வன்னியர் சமூகத்தில் பாமகவுக்கு செல்வாக்கு இல்லை என சொல்வதை திமுக, அதிமுக தலைமையே நம்பாது என்கிற நிலையில், வன்னியர்களிடம் விஜய்க்கு அமோக ஆதரவு இருப்பதாகச்சொல்வதுதான் சர்வேயின் மொத்த முடிவுகள் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

இதற்கிடையே, இந்த சர்வே போலியானது என்றும், கணிசமான தொகை த.வெ.க.. தரப்பிலிருந்து செலவிடப்பட்டு சோசியால் மீடியாக்களில் வரவழைத்துள்ளனர் என்றும் திமுக தரப்பில் கண்டறியப்பட்டுள்ளதாம்.

அதிமுக கேள்வி

இந்த நிலையில்தான் புதிதாக கட்சி தொடங்கிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயால் கருத்து கணிப்பு நடத்த முடிகிறது.. நம்மால் செய்ய முடியாதா என்ற கேள்வி அதிமுகவில் எழுந்துள்ளதாம்.

கருத்து கணிப்பு மூலம் விஜயால் narrative set செய்ய முடிகிறது. நாம் பெரிய அமைப்பை வைத்து இருக்கிறோம். இத்தனை ஆண்டுகளாக இருக்கும் நம்மால் அதை செய்ய முடியாதா? திமுக, விஜய் நம்பர் 1, 2.. மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும் அதிமுக? என்று narrative உருவாக்குகிறார்கள். இதை நாம் அனுமதிக்க கூடாது. நமக்கு சாதகமாக சர்வே வர வேண்டும்.. அதிமுக வேடிக்கை பார்க்கிறது.

அதிமுக என்ன தான் செய்து கொண்டு உள்ளது? நமக்கு சாதகமாக சர்வே வர வேண்டும்.. என்று எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகள் மெசேஜ் அனுப்ப தொடங்கி உள்ளார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+