2 நாளைக்கு எதுவும் வேண்டாம்.. கூட்டணி முடிவை எடுத்தும்.. அறிவிக்காத பாமக? பின்னாடி இப்படி ஒரு காரணமா
சென்னை: பாமக எந்த கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற முடிவை ஏற்கனவே எடுத்துவிட்டதாம். ஆனாலும் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடாமல் அந்த கட்சி காலம் தாழ்த்தி வருகிறதாம். இதற்கு பின் முக்கிய காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.
2024 லோக்சபா தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. ராமதாஸ், அதிமுக கூட்டணியையும் ; அன்புமணி, பாஜக கூட்டணியையும் விரும்புகிறார்கள். ஆனால் இருவரும் தற்போது ஒரு முடிவிற்கு வந்துள்ளதாக தெரிகிறது.

பாமக கூட்டணி: முதலில் பாஜக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று அன்புமணி நினைத்தாராம். கிட்டத்தட்ட அடம் பிடித்தாராம். பாஜகவுடன் கூட்டணி வைத்தால்.. எப்படியும் பாஜக மீண்டும் வெல்லும்.. அதன் மூலம் லோக்சபா தேர்தலில் நாமும் வென்று அமைச்சர் ஆகலாம் என்று அன்புமணி நினைக்கிறாராம். அதன்படி லோக்சபா தேர்தலில் அன்புமணிக்கு தர்மபுரி தொகுதியை மீண்டும் கொடுக்க வேண்டும். அங்கே திமுக தற்போது வலிமை இழந்துவிட்டது.
அன்புமணி அங்கே வெற்றிபெறும் பட்சத்தில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும். மொத்தமாக 10 இடங்களில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் இடங்களை குறைத்துக்கொண்டு.. அன்புமணிக்கு "மீண்டும்" ராஜ்ய சபை செல்ல வாய்ப்பு + அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று பாமக சார்பாக பாஜகவிடம் அன்புமணி கோரிக்கை வைத்து உள்ளாராம்..
அன்புமணி 10 லோக்சபா சீட் + 1 ராஜ்ய சபா சீட் + ஒரு அமைச்சர் பதவி கேட்க.. 1 ராஜ்ய சபா சீட் + ஒரு அமைச்சர் பதவி கிடையாது. 4 லோக்சபா சீட் என்று பாஜக கூறியுள்ளாதாம். இதையடுத்து பாமக இறங்கி வந்து 10 லோக்சபா சீட் + அமைச்சர் பதவி என்றுள்ளதாம். இதையடுத்து 10 லோக்சபா சீட் ஓகே + மத்திய பிரிவுகளில் பெரிய பதவி ஒன்று + பாமகவில் ஒருவர் எம்பி ஆனால் அமைச்சர் பதவி பற்றி பார்க்கலாம் என்று பாஜக சொல்லி இருக்கிறதாம்.
ஆனால் அன்புமணிக்கு எதிரான வழக்கில் இருந்து விடுதலை எல்லாம் செய்ய வாய்ப்பு இல்லை என்று டெல்லி மறுத்துவிட்டதாம்.
அதிமுக பேச்சு: இதையடுத்து அதிமுக சார்பாக பாமகவின் நிறுவனர் ராமதாஸிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்போது வைக்கும் கூட்டணியை 2026லும் தொடரலாம். நாம் சேர்ந்தால் சில இடங்களில் 2ம் இடம் அல்ல வெற்றிபெறும் வாய்ப்பு கூட உள்ளது. பாஜக கூட்டணியில் அதற்கு வாய்ப்பு இல்லை.
அன்புமணியிடம் பேசுங்கள். நீங்கள் விரும்பும் தொகுதியை கண்டிப்பாக கொடுக்கிறோம் என்று அதிமுக சார்பாக பேசப்பட்டு வருகிறதாம். 2026 தேர்தலில் அதிமுக கூட்டணி நல்ல பலன் தரும் என கட்சிகாரர்கள் சொல்கிறார்கள் என சொல்லி அதிமுக உடன் கூட்டணி வைக்க பாமக முடிவு செய்துள்ளதாம் . 7 லோக்சபா சீட், 1 ராஜ்ய சபா சீட் என்று உறுதியாகி இருக்கிறதாம்.
இதை உறுதி செய்யவே சென்னையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாமக எம்எல்ஏ அருள் சந்திப்பு நடத்தினாராம். இதில் பாமக அதிமுக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்ற முடிவை ஏற்கனவே எடுத்துவிட்டதாம். ஆனாலும் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடாமல் அந்த கட்சி காலம் தாழ்த்தி வருகிறதாம்.
அஷ்டமி, நவமி என்ற இரண்டு நாட்கள் முடிந்த பின் கட்சி கூட்டணி அறிவிப்பை வெளியிடலாம் என்று பாமக முடிவு செய்துள்ளதாம். இதனால் நாளை இந்த முடிவை வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்!












Click it and Unblock the Notifications