”எல்லாம் மேலே இருப்பவர்கள் கையில்..” அதிமுக ஒற்றை தலைமை குறித்து ஒற்றை வரியில் முத்தரசன் பதில்
சென்னை: அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டுமா? இரட்டைத் தலைமையே தொடரட்டுமா? என்பதை அவர்களை இயக்குபவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
நெல்லையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மண்டல மாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25 வது மாநில மாநாடு வரும் 6 முதல் 9 வரை திருப்பூரில் நடக்கிறது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில மாநாடு
இந்த கூட்டத்தில் டி.ராஜா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். மாநட்டில் தேசிய, மாநில மற்றும் சமூக பிரச்சனை குறித்த விவாதம் செய்யப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இறுதி நாளான ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு முழக்கம் எழுந்த நாள். அன்றைய தினத்தில் மக்கள் விரோத, பாசிச மோடி அரசே வெளியேறு என்ற முழக்கங்களை முன்வைத்து மாநாடு நடக்கிறது.

மத்திய அரசு மீது புகார்
மத்திய அரசு 8 ஆண்டு காலத்தில் சொன்ன வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. மாறாக மக்கள், விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களையே கொண்டு வந்துள்ளனர். அக்னிபாதை என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்ததில் இருந்து நாடே தீப்பற்றி எரிந்து வருகிறது. 17 வயதில் பணியில் சேரலாம் என்ற அக்னிபாத் திட்டம் இளைஞர்களை ஏமாற்றும் திட்டம். இந்த திட்டத்தை கைவிட வேண்டும். இது நல்ல திட்டமில்லை. இளைஞர்களை எந்த அரசியல் கட்சிகளும் தூண்டவில்லை. தானாக அவர்கள் போராடுகிறார்கள்.

அக்னிபாத்
இளைஞர்களின் வேலை நெருக்கடியை மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தின் மூலம் பயன்படுத்தி கொள்கிறது. 4 ஆண்டுகள் பணி முடித்து வெளிவந்த இளைஞர்களின் நிலை கேள்விகுறியாகும் சூழல் நிலவிவருகிறது. ராணுவத்தில் ஆள் சேர்க்க பின்பற்றப்பட்டுவந்த பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும். அக்னிபாத் திட்ட பிரச்சனை குறித்து ராணுவ தளபதிகள் தலையிட்டு கருத்துகள் சொல்வது தவறாகும்.

அதிமுக விவகாரம்
எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து குடியரசு தலைவர் தேர்தலில் செயல்பட்டால் பாஜக அரசின் வேட்பாளரை தோற்கடிக்கமுடியும். இது 2024 ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு மிகப்பெரிய பயனளிக்கும். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக சுயமாக செயல்படவில்லை. ஒற்றைத் தலைமையா? அல்லது இரட்டை தலைமையா? என்பதை அதிமுகவை இயக்குபவர்கள் முடிவு செய்வார்கள்." என தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications