"234 தொகுதிகளிலும் எடப்பாடியே போட்டியிட வேண்டும்".. விருப்ப மனுக்களை கொட்டிய அதிமுக ஐடி விங்!
சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து அதற்கான 234 விருப்ப மனுக்களை இன்று அதிமுக ஐடி விங் சார்பில் வழங்கி உள்ளனர்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன. மேலும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் வியூகம் வகுப்பது, தொகுதி வாரியாக கட்சியை பலப்படுத்தும் பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் அதிமுக சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோர், விருப்ப மனுக்களை பெறுவதற்கான பணிகள் கடந்த 15 ஆம் தேதி துவங்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் வரும் 23 ஆம் தேதி வரை, தினமும் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.
போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து, ரூ.15,000-க்கு டி.டி எடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முறையாக சமர்ப்பிக்க வேண்டும் என்று அதிமுக தலைமை கேட்டுக் கொண்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறும் வகையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுகவினர், சென்னை அதிமுக தலைமை அலுவலகம் வந்து, விருப்ப மனுக்களை பெற்று பணம் செலுத்தி விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். மேலும், தங்கள் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து பலரும் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதிமுக வேட்பாளராகப் போட்டியிட விருப்பம் தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியினர் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என விருப்ப மனு அளித்துள்ளனர். வரும் சட்டசபை தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியே அதிமுக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்து அதற்கான 234 விருப்ப மனுக்களை இன்று அதிமுக ஐடி விங் சார்பில் வழங்கி உள்ளனர்.
-
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
"காங்- பாஜக கதை ஓவர்".. தொகுதி ஒதுக்கீட்டில் ஸ்டாலின்- எடப்பாடி செய்த சம்பவம்! இதை கவனிச்சீங்களா? -
அதிமுக 3ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணா நகரில் கோகுல இந்திரா, ஆயிரம் விளக்கில் வளர்மதி! -
கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்து போட்டி.. யார் இந்த சந்தான கிருஷ்ணன்? வடசென்னை ரிசல்ட் தெரியுமா? -
அதிமுகவுக்கு ஆதரவு.. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க்கு நீலம் பண்பாட்டு மையம் சப்போர்ட்! பா.ரஞ்சித் அறிவிப்பு -
இனிமே கரூர் நாங்கதான்.. அடித்து சொல்லும் அதிமுக! கோவைக்கு ஜாகையை மாற்றிய செ.பா.. செம குஷியில் வி.பா! -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
ஆதவ் உட்பட ஒரே குடும்பத்திலிருந்து களமிறங்கும் 3 வேட்பாளர்கள்.. கட்சி வேறு வேறு.. சுவாரஸ்யம்! -
"தேமுதிக அங்கீகாரம் இல்லாத கட்சியா?".. எடப்பாடி பழனிசாமிக்கு பிரேமலதா பதிலடி! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்?












Click it and Unblock the Notifications