Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு சசிகலா நேரில் அஞ்சலி - வெளியேறிய அதிமுக தலைவர்கள்

மதுசூதனன் மறைவு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று சசிகலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். நேரில் வந்தும் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் மறைவு செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். மதுசூதனன் மறைவு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்றும் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். மதுசூதனன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது சென்று உடல் நலம் விசாரித்த சசிகலா தற்போது நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Recommended Video

    Who Is Madhusudhanan | AIADMK | Biography | Oneindia Tamil

    அதிமுக அவைத்தலைவராக இருந்த மூத்த தலைவர் மதுசூதனன். கடந்த சில ஆண்டுகளாகவே இவரது உடல்நிலையில் சில பிரச்சினைகள் இருந்தன. 80 வயதான மதுசூதனனுக்கு கடந்த ஜூலை மாதம் திடீரென மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்பட்டது.

     AIADMK leader Madhusudhanans death Sasikala mourning - will you go to pay tribute in person

    இதையடுத்து அவர் சிகிச்சைக்காகச் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை திடீரென மோசமானது, மேலும் வென்டிலேட்டர் உதவியுடனும் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலையில் அவர் மரணமடைந்தார்.

    மதுசூதனன் மறைவுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சசிகலாவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மதுசூதனன் மறைவு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும், மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் எத்தனையோ சோதனையான காலகட்டங்களில் துணை நின்றவர், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் இடத்தில் மிகுந்த பாசம் கொண்டவர்.

    மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அமைச்சராகவும், 2007ஆம் ஆண்டு முதல் அவைத் தலைவராகவும் இருந்த போதும் தன்னை ஒரு எளிய தொண்டனாகவே வாழ்ந்து காட்டியவர். அவர் மறைவு செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அனைத்து தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

    உடல்நலக்குறைவினால் கடந்த மாதம் மதுசூதனன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சசிகலா நேரில் வந்து நலம் விசாரித்தார். அதிமுக கட்சி கொடி கட்டிய காரில் வந்து நலம் விசாரித்தார் சசிகலா. மதுசூதனன் சிகிச்சை செலவுக்கு பணம் தருவதாகவும் சசிகலா கூறியதாக தகவல் வெளியானது.
    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்த மதுசூதனன் உடல் தண்டையார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

    அதிமுகவினர் ஏராளமானோர் தண்டையார்பேட்டை இல்லத்தில் குவிந்துள்ளனர். இன்று காலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் மதுசூதனன் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்ரமணியம், சேகர்பாபு ஆகியோரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரிடம் துக்கம் விசாரித்து ஆறுதல் கூறினார்.

    மதுசூதனன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள சசிகலாவும் நேரில் வந்து அஞ்சலி செலுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் சசிகலா தண்டையார்பேட்டைக்கு நேரில் வந்து மதுசூதனன் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். மதுசூதனன் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார் சசிகலா. சசிகலா வருகையை முன்னிட்டு ஏராளமான அதிமுகவினர் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சசிகலா நேரில் வரப்போகும் தகவல் அறிந்த உடன் அதிமுக தலைவர்கள் ஓபிஎஸ், இபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் ஆகியோர் அங்கிருந்து உடனடியாக வெளியே சென்றனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+