பிடிஆர் ஆடியோ உண்மையா.. பொய்யா? விடாமல் விரட்டும் அதிமுக.. சுப்ரீம் கோர்ட்டுக்கு பறந்த பரபர கடிதம்!
சென்னை : அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ பரபரப்பைக் கிளப்பி இருந்த நிலையில் சமீபத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெற்றது. ஆடியோ விவகாரத்தை சீரியஸாக கையில் எடுத்துள்ள அதிமுக, இந்த ஆடியோவின் உண்மைத் தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய நிதி அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளது.
தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரும் முன்னாள் நிதி அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. அந்த ஆடியோவில் உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் அவர்களது முன்னோர்களை விட இந்த 2 ஆண்டுகளில் அதிகமாக பணம் சம்பாதித்துள்ளனர். அது தோராயமாக ஒரு 30,000 கோடி இருக்கும் என அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்பட்டது.

அமைச்சர் ஆடியோ : அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், இந்த ஆடியோ ஜோடிக்கப்பட்டது, பொய்யானது என்று விளக்கம் அளித்து இருந்தார். இதற்கிடையே அதிமுக செய்தி தொடர்பாளரான வழக்கறிஞர் பாபு முருகவேல், நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகம், பாரிமுனையில் உள்ள மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகம் உள்ளிட்டவற்றிற்கு பிடிஆர் ஆடியோ தொடர்பாக புகார் அனுப்பினார். ஆளுநரைச் சந்தித்தும், அதிமுகவினர் இதுதொடர்பான நடவடிக்கையைக் கோரினர்.
மேலும், டெல்லி சென்றிருந்தபோது எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் இந்த ஆடியோவில் பேசப்பட்ட விவகாரம் தொடர்பாக முறையிட்டதோடு, திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதுவரை அதிமுகவினர் மீதான புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் அமைச்சர் பிடிஆரின் இலாகா மாற்றப்பட்டது.

கையில் எடுத்த அதிமுக : இந்த நிலையில் அதிமுக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான பாபு முருகவேல் சிபிஐ மற்றும் மத்திய லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்திற்கு அனுப்பிய புகார் மீது சிபிஐ மற்றும் மத்திய லஞ்ச ஒழிப்பு துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ குறித்து அளித்த புகாரின் பேரில் சிபிஐ நடவடிக்கை எடுக்காததால் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அமைச்சர் பிடிஆர் பேசுவதாக வெளியான ஆடியோவில் கூறப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கோரி, முன்னாள் எம்.எல்.ஏவும் அதிமுக வழக்கறிஞருமான பாபு முருகவேல், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய நிதியமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லிக்கு பறந்த கடிதம் : அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் எழுதியுள்ள கடிதத்தில், "முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ விவகாரத்தில், அந்த குரல் பதிவின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து அவர் கூறியிருக்கிற குற்றச்சாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாறாக அது இவர்களின் குரலை போலவே யாரோ ஒருவர் பேசி அனுப்பி இருந்தால் அந்த நபர் யார் என்று கண்டறிந்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடந்த 25.4.2023 அன்று மத்திய லஞ்ச ஒழிப்பு துறைக்கும், மத்திய புலனாய்வு துறைக்கும் நான் புகார் மனு அனுப்பியிருந்தேன். அதன் மீது உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

பாபு முருகவேல் கடிதம் : மேலும், இதற்கிடையே பிடிஆர் பேசியதாக மற்றொரு ஆடியோவும் வெளியானது. இதில் பாஜகவின் சட்ட விதிகள் சரியாக இருப்பதாகவும், கட்சி மற்றும் ஆட்சியை பிரித்துப் பார்ப்பது சரியான நிலை என தெரிவித்திருப்பது போல் ஆடியோ வெளியானது. இந்நிலையில் நான் அனுப்பிய புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால், உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசருக்கும், பெருவாரியான பணம் இதிலே சம்பந்தப்பட்டிருக்கிறது என்ற காரணத்தினால் சிறப்பு புலனாய்வு குழுவை பணம் சார்ந்த விஷயங்களுக்கு நியமிக்கும் அதிகாரம் மத்திய நிதி அமைச்சருக்கு இருக்கிறது என்பதன் அடிப்படையில் மத்திய நிதி அமைச்சருக்கும்,
இதன் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழுவை சிறந்த அதிகாரிகளை கொண்டு நியமிக்கின்ற அதிகாரம் முதலமைச்சருக்கு இருக்கிறது என்ற அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சருக்கும் இந்தக் கடிதத்தை அனுப்புவதாக பாபு முருகவேல் தெரிவித்துள்ளார். பிடிஆர் விவகாரத்தை அதிமுக விடாமல் கையில் எடுத்து அடுத்தடுத்த நகர்வுகளைச் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜயின் தவெக கூட்டணியில் இணையப்போகும் புதிய தமிழகம்? கிருஷ்ணசாமி சொன்ன பதில்! -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications