சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

9 தொகுதி வேணும்.. தேமுதிக கறார்.. முடியவே முடியாது.. பாஜக பளீர்.. கூட்டணியில் இழுபறி!

அதிமுகவுடன் லோக்சபா தேர்தலுக்காக தேமுதிக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை சென்னையில் நடத்தி வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியில் தேமுதிக 9 தொகுதிகள் கேட்பதால் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் இன்று கூட்டணி குறித்த எந்த விதமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

அதிமுக தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்காக மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க உள்ளது. அதிமுக - பாமக - பாஜக - தேமுதிக - மற்றும் பலர் இந்த கூட்டணியில் இணைய இருக்கிறார்கள். இதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இன்று அதிமுக - பாமக கூட்டணி உறுதியாகி உள்ளது. பாமக - அதிமுக ஒப்பந்தம் இன்று தான் கையெழுத்தானது. அதன்படி 7 லோக்சபா தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட இருக்கிறது. அதேபோல் பாஜக இதில் 5 தொகுதியில் போட்டியிட உள்ளது. இதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளது.

தேமுதிக

தேமுதிக

இதையடுத்து பாஜகவுடன் லோக்சபா தேர்தலுக்காக தேமுதிக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையை சென்னையில் நடத்தியது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் பாஜக நிர்வாகிகளுடன் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். சென்னையில் உள்ள விஜயகாந்த்தின் விருகம்பாக்கம் வீட்டில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

அதிமுக புறக்கணிப்பு

அதிமுக புறக்கணிப்பு

அதிமுக சார்பாக தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை யாரும் செல்லவில்லை. அதிமுக நிர்வாகிகள் ஒருவர் கூட இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. பாஜக மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

பாஜக சந்திப்பு

பாஜக சந்திப்பு

பாஜக அமைச்சர் பியூஷ் கோயலும் மற்ற பாஜக நிர்வாகிகளும் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்றனர். அதிமுக - பாஜக - பாமக- தேமுதிக கூட்டணி குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. பாஜக இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர்.

பாஜக சந்திப்பு

பாஜக சந்திப்பு

பாஜக அமைச்சர் பியூஷ் கோயலும் மற்ற பாஜக நிர்வாகிகளும் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்றனர். அதிமுக - பாஜக - பாமக- தேமுதிக கூட்டணி குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. பாஜக இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் பலர் இந்த சந்திப்பில் உடன் இருந்தனர்.

வீட்டிற்கு வெளியே

வீட்டிற்கு வெளியே

முதலில் வீட்டிற்கு உள்ளே விஜயகாந்துடன் பியூஸ் கோயல் ஆலோசனை நடத்தினார். விஜயகாந்தின் உடல்நிலை குறித்து விசாரித்தார். அதன்பின் வீட்டிற்கு வெளியே சுதீஷுடன் கோயல் ஆலோசனை நடத்தினார். வீட்டிற்கு வெளியே இவர்கள் 10 நிமிடம் பேசினார்கள். ஆனால் இதிலும் உடன்படிக்கை ஏற்படாத காரணத்தால், பாஜகவினர் கூட்டணியை இறுதி செய்யாமல் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

English summary
AIADMK Lok Sabah Alliance: DMDK holds a meeting with AIADMK officials in Chennai. Alliance announcement may come by today itself.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X