‛மாப்பிள்ளை' செந்தில் பாலாஜி.. Sorry.. Sorry.. சட்டசபையில் பேசிய அதிமுக எம்எல்ஏவால் சிரிப்பலை
சென்னை: தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தொடரில் அதிமுக எம்.எல்.ஏ கருப்பண்ணன், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்த்து ‛மாப்பிள்ளை' என்று கூறி பேசியதோடு, அதன் பிறகு உடனடியாக Sorry Sorry என்று கேட்டதும் அனைவருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. சட்டசபையில் நடந்த இந்த சுவாரசிய சம்பவம் குறித்த விபரம் வருமாறு:
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. தமிழகத்துக்கான 2025-26ம்ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகியவை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தமிழக சட்டசபையில் நடந்து வருகிறது.
இன்று வழக்கம்போல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் அதிமுக எம்எல்ஏ கருப்பண்ணன் எழுந்து பேசினார்.

அப்போது கருப்பண்ணன், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை ‛மாப்பிள்ளை' என்று குறிப்பிட்டு கோரிக்கை வைத்தார். இதை கேட்டதும் அதிமுக எம்எல்ஏக்கள், திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சிரித்தனர். உடனே சுதாரித்து கொண்ட அதிமுக எம்.எல்.ஏ கருப்பண்ணன் ‛‛Sorry'' என்று கேட்டது சுவாரசியத்தை ஏற்படுத்தியது.
அதாவது கருப்பண்ணன் சட்டசபையில், ‛‛தனியார் நிறுவனங்களில் சோலார் பேனல்கள் நிறைய போடுகிறார்கள். அதில் மின்சாரத்துறை 100 கேவிக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்படுகிறது. வெயில் கம்மியா இருக்கும் காலத்தில் அந்த மின்சாரம் போதுமானதாக இல்லை. இதனால் 100 கேவி என்பதை 120 கேவி வரை அனுமதி கொடுத்தால் சவுகரியமாக இருக்கும். அதனால் மின்சாரத்துறைக்கும் எந்த நஷ்டமும் இல்லை.
மாப்பிள்ளைக்கு (மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி) தெரியும். Sorry Sorry.. அப்படி பேசி பேசி வாய் வந்திருச்சு. அவர்களுக்கு தெரியும். 100 கேவி என்பதை 110 கேவி, 120 கேவி என்று கொடுத்தால் சவுகரியமாக இருக்கும். அதற்கு அனுமதி கொடுக்க வேண்டும்'' என்றார். இதை கேட்டவுடன் சபையில் இருந்த அதிமுக, திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சத்தமாக சிரித்தனர்.
இதையடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிரித்தபடி எழுந்து பதிலளித்தார். செந்தில் பாலாஜி பேசும்போது, ‛‛தனியார் சேலார் பேனல் அமைப்பு குறித்தும், சேலார் பேனல் இணைப்பு குறித்தும் உறுப்பினர் எடுத்து கூறினார். மிக விரைவாக அவர்களுக்கான அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது. தரம் உயர்த்துவது குறித்தும், அதிகாரிகளிடம் எடுத்து கூறி ஆவணம் செய்யப்படும்'' என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications