Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சட்டசபை பேச்சை கவனித்தீர்களா.. திமுகவிற்கு தாவும் அதிமுகவின் முக்கிய புள்ளி? வெலவெலத்த ஓபிஎஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று தமிழ்நாடு சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ ஒருவர் ஆளும் திமுக அரசுக்கு சாதகமாக பேசியது அதிமுக வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது. என்னங்க நடக்குது என்று சட்டசபை நிகழ்வுகளை பார்த்து "ரரக்கள்" கொஞ்சம் கொதிப்பில் இருக்கிறார்களாம்.

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் இரண்டாம் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. நீட் தேர்வு விலக்கு சட்டத்திற்கு இன்னும் ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்காத நிலையில் இந்த சட்டசபை கூட்டத்தொடர் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் கண்டிப்பாக தொடரும். இன்று மருத்துவத் துறையிலே நம் நாட்டிற்கே முன்னோடியாக நாம் விளங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த நீட் தேர்வில் இருந்து கண்டிப்பாக விலக்கு பெற்று தீருவோம். 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலேயே கல்லூரி மாணவர் சேர்க்கை அமைய வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது என்று முதல்வர் ஸ்டாலினும் அவையில் உறுதி அளித்து இருக்கிறார்.

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்றைய (6.1.2022) கூட்டத்தில் பேசிய அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வைத்தியலிங்கம் பேசினார். நீட் தேர்வு விலக்கு தொடர்பாக தமிழக அரசு எடுக்கும் எந்த முடிவுக்கும் அதிமுக ஆதரவு கொடுக்கும். நீட் தேர்வு விசயத்தில் பிரதமருக்கு எதிராக போராட்டம் நடத்தினாலும் அதனை ஆதரிப்போம் என்று பேசினார். இவரின் பேச்சு அவையில் பெரிய அளவில் கவனம் பெற்றது.

தமிழ்நாடு நீட்

தமிழ்நாடு நீட்

வைத்தியலிங்கத்தின் இந்த பேச்சை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பலரும் ரசித்தனர். அதிமுகவிலும் இதற்கு பெரும் ஆதரவு இருப்பதை, கட்சியின் நிர்வாகிகள் பலரும் வைத்தியலிங்கத்தை தொடர்பு கொண்டு பாராட்டியதில் அறிய முடிந்தது. நீட் தேர்வில் தமிழ்நாடு அரசு தனது நிலைப்பாட்டை கூறிவிட்டது. இப்படிப்பட்ட நேரத்தில் அதிமுகவின் உறுதியான நிலைப்பாட்டை வைத்தியலிங்கம் தெளிவாக கூறி இருக்கிறார். இதை மக்கள் கண்டிப்பாக வரவேற்பார்கள் என்று வைத்தியலிங்கத்தின் பேச்சுக்கு அதிமுகவில் பெரிய அளவில் பாராட்டு கிட்டி இருக்கிறது.

நீட் அதிமுக

நீட் அதிமுக

அதேசமயம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலர் மட்டும் வைத்தியலிங்கத்தின் பேச்சை ரசிக்கவில்லை என அதிமுகவில் தரப்பில் இருந்து தகவல்கள் வருகின்றன. இது குறித்து ஒன்இந்தியா சார்பாக அதிமுகவின் மூத்த நிர்வாகி ஒருவரிடம் நேரடியாக விசாரித்தபோது, பேரவை நிகழ்ச்சிகள் முடிந்ததும் வைத்தியலிங்கத்திடம் பேசினார் ஓபிஎஸ். வைத்தியலிங்கம் பேசிய சில விஷயங்களை ஓபிஎஸ் ஏற்றுக்கொள்ளவில்லை.

மோடி பற்றி பேசி இருக்க கூடாது

மோடி பற்றி பேசி இருக்க கூடாது

நீட் தேர்வு விசயத்தில் மாநில அரசின் முடிவுகளுக்கு ஒத்துழைப்போம் என சொன்னவரையில் ஓ.கே. ! ஆனால், பிரமருக்கு எதிரான போராட்டங்களுக்கும் ஆதரவளிப்போம் என சொன்னதை தவிர்த்திருக்க வேண்டும். அது நமக்குதான் சிக்கலாக முடியும் என ஓபிஎஸ் வைத்தியலிங்கத்திடம் சொல்லி இருக்கிறார், என்று அந்த அதிமுக நிர்வாகி நம்மிடம் தெரிவித்தார். மேலும் ஓபிஎஸ்ஸிடம் இதற்கு பதில் அளித்த வைத்தியலிங்கமோ, நீட் தேர்வில் எந்த முடிவை தமிழக அரசு எடுத்தாலும் ஆதரவு அளிக்கலாம் என்று தானே முந்தைய நாளில் நாம் விவாதித்து முடிவெடுத்தோம்.

நீட் எதிர்ப்பு வைத்தியலிங்கம்

நீட் எதிர்ப்பு வைத்தியலிங்கம்

அதனால்தான் அப்படி பேசினேன் என தெரிவித்திருக்கிறார். நான் பேசியது அதிமுகவின் நிலைப்பாடுதான். புதிதாக கட்சிக்கு எதிராக எதுவும் பேசவில்லை என்று வைத்தியலிங்கம் ஓபிஎஸ்ஸிடம் பதில் அளித்தாக கூறியதாக அந்த அதிமுக நிர்வாகி நம்மிடம் பின்னணியை போட்டு உடைத்தார். இதற்கிடையே, அதிமுகவில் ஸ்கோர் பண்ணுவதில் தனித்து இயங்க வேண்டும் என வைத்தியலிங்கம் தீர்மானித்திருப்பதாகவும், விரைவில் அவரை திமுக அரவணைத்துக் கொள்ளும் என்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.

 திமுக வைத்தியலிங்கம்

திமுக வைத்தியலிங்கம்

அவரின் பேச்சை திமுகவினர் பெரிதும் ரசித்து உள்ளனர். அவையிலேயே கொடுத்த கிளீன் சிக்னலாக இது பார்க்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்புதான் செல்லூர் ராஜு முதல்வர் ஸ்டாலினை பாராட்டி பேசினார். இப்போது வைத்தியலிங்கம் இப்படி பேசி இருக்கிறார். இது திமுகவிற்கு செல்லும் சிக்னலா அல்லது திமுக அரசின் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்கான சமாதான தூதா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+