அதென்ன அதிமுக எம்.எல்.ஏக்கள் கையில்..? சட்டசபைக்கு இன்று கருப்பு பட்டை அணிந்து வந்த அதிமுகவினர்!
சென்னை: தமிழக சட்டசபைக்கு அதிமுக எம்எல்ஏ-க்கள் இன்று தங்கள் கைகளில் கருப்புப் பட்டை அணிந்து வருகை தந்துள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம், கிட்னி திருட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளனர்.
தமிழக சட்டசபை கூட்டம் நேற்று (அக்டோபர் 14) காலை 9.30 மணிக்கு கூடியது. வரும் 17ஆம் தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. நேற்று காலை கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., அமுல் கந்தசாமி, கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன், நாகாலாந்து முன்னாள் கவர்னர் கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சுதாகர் ரெட்டி, ஐ.ஏ.எஸ் அதிகாரி பீலா வெங்கடேசன் ஆகியோர் மறைவுக்கு சபாநாயகர் அப்பாவு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தோருக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, சபை நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, இன்று மீண்டும் சட்டசபை கூடி உள்ளது. இன்று கூடுதல் மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படும். அதன் மீதான விவாதம், நாளை வரை நடக்கும். விவாதத்திற்கு, 17 ஆம் தேதி பதில் அளிக்கப்படும். அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய மசோதா நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
கரூர் துயர சம்பவம், கிட்னி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை, சட்டசபையில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று சட்டசபைக்கு வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளனர்.
கரூர் கூட்ட நெரிசல் பலி சம்பவம், கிட்னி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்துள்ளனர். இன்று காலை தமிழக சட்டப்பேரவைக் கூடியவுடன் கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தை தொடர்ந்து, 2025-2026-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்படவுள்ளது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications