திமுகவுக்கு ஷாக்.. வன்னியர் நிறைந்த 3 தொகுதி + தனி சின்னம்.. வேல்முருகனுக்கு அதிமுக ஆஃபரின் பின்னணி
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி அதிருப்தியில் உள்ளது. அந்த கட்சியின் 10 அம்ச கோரிக்கையை ஏற்காதது மற்றும் கூடுதல் சீட் ஒதுக்க திமுக மறுப்பது தான் இந்த அதிருப்திக்கு காரணம். இந்நிலையில் தான் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு அதிமுக சார்பில் பெரிய ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. அவரது கோரிக்கையை பரிசீலனை செய்வதாகவும், 3 தொகுதிகள் ஒதுக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வேல்முருகனின் கட்சிக்கு ஒதுக்குவதாக அதிமுக சொன்ன தொகுதிகளின் விவரம் வெளியாகி உள்ளது.
திமுக கூட்டணியில் தற்போது புயல் வீசி வருகிறது. திமுக கூட்டணி 21 கட்சிகளுடன் கம்பீரமாக தோன்றும் நிலையில் தொகுதி பங்கீட்டில் பெரும் குழப்பம் உள்ளது. விசிக, மார்க்சிஸ்ட், மக்கள் நீதி மய்யம், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவை கடும் அதிருப்தியில் உள்ளன.

குறிப்பாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ''நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சிக்கு கூடுதல் இடங்கள் தர வேண்டும் என்று திமுகவின் பேச்சுவார்த்தை குழுவிடம் தெரிவித்தோம். இன்னும் பதிலளிக்கவில்லை. இதனால் திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கட்சியினர் தெரிவித்துள்ளனர்'' என்றார்.
கூடுதல் தொகுதி + 10 கோரிக்கை
திமுக கூடுதல் தொகுதிகள் வழங்க வேண்டும். அதோடு தங்களின் ஜாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு, ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்துதல் மாநில அரசு வேலைவாய்ப்புகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு, மத்திய அரசு வேகைலளில் தமிழர்களுக்கு 80 சதவீத இடதுக்கீடு, கோவில்களில் தமிழில் அர்ச்சனை, பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஈழ தமிழர்களை விடுவித்து சொந்த நாட்டுக்கு அனுப்புதல், சுங்க கட்டணத்தை ரத்து செய்தல் உள்பட 10 கோரிக்கைகளை முன்வைத்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
செவி சாய்க்காத திமுக
இப்படி அதிருப்தி இருந்தாலும் கூட கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம் என்று வேல்முருகன் இன்னும் கூறவில்லை. இன்று மாலை வரை திமுகவுக்கு 'டைம்' கொடுத்துள்ளார். ஒருவேளை திமுக அவரது கோரிக்கையை ஏற்று அழைக்கவில்லை. இன்றும் திமுக தலைமை அவரை அழைக்கவில்லை என்றால் அவர் திமுக கூட்டணிக்கு 'குட்பை' சொல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிமுக அழைப்பு
இதற்கிடையே திமுக தொடர்ந்து அமைதி காத்து வருவதால் வேல்முருகன் அதிருப்தியாகி உள்ளார். இதற்கிடையே தான் தமிழக வாழ்வுரிமை கட்சியை அதிமுக தனது கூட்டணிக்குள் இழுக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி அதிமுக தனது கூட்டணிக்கு அழைத்துள்ளார். அவரது 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற பரிசீலனை செய்வதாகவும், 3 சட்டசபை தொகுதிகளை ஒதுக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 தொகுதி + தனி சின்னம் ஆஃபர்
அதன்படி பண்ருட்டி, நெய்வேலி, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட தொகுதிகளை தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு வழங்குவதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சொந்த சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பையும் வழங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் பண்ருட்டி தொகுதி கடலூர் மாவட்டத்தில் உள்ளது. இந்த தொகுதியின் எம்எல்ஏவாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தான் இருக்கிறார். இவர் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் மொத்தம் 93,801 வாக்குகள் பெற்ற நிலையில் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரன் 89,104 ஓட்டுகள் வாங்கியிருந்தார். இதனால் வேல்முருகன் 4,697 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். மீண்டும் அவர் களமிறங்க தயாராகி வருகிறார்.
நெய்வேலி - ஜெயங்கொண்டம்
அதேபோல் நெய்வேலி தொகுதியும் கடலூர் மாவட்டத்தில் தான் உள்ளது. இங்கு திமுக எம்எல்ஏவாக சபா ராஜேந்திரன் உள்ளார். அதேபோல் ஜெயங்கொண்டம் தொகுதி அரியலூர் மாவட்டத்தில் உள்ளது. இங்கும் திமுக எம்எல்ஏ கண்ணன் உள்ளார். இந்த 3 தொகுதிகளிலும் வன்னியர்கள் ஓட்டு அதிகம் உள்ளது. வேல்முருகன் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர். இதனால் அவருக்கு இந்த 3 தொகுதிகளை வழங்குவதாகவும், சொந்த சின்னத்தில் கூட நிற்கலாம் என்றும் அதிமுக சார்பில் ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது.
திமுகவுக்கு ஷாக்
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாமகவின் அண்புமணி அணி உள்ளது. இதனால் வன்னியர் ஓட்டுகள் அதிமுகவுக்கு கிடைக்கும். ஒருவேளை வேல்முருகனும், அதிமுக கூட்டணிக்கு வந்தால் வன்னியர்கள் ஓட்டு பெருமளவு கிடைக்கும். இது வடமாவட்டங்களில் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
ஏனெ்னறால் வன்னியர்கள் சமுதாய தலைலவர்கள் திமுகவில் இருந்தாலும் கூட கட்சி ரீதியிலான தலைவர்கள் திமுக கூட்டணியில் வேல்முருகன் மட்டும் தான். அவரும் அங்கிருந்து விலகினால் அது பின்னடைவை ஏற்படுத்தும். இதனால் தான் அதிமுக, வேல்முருகனுக்கு ஆஃபரை அள்ளி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
-
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
சொதப்பும் ஸ்டாலின்.. திமுகவுக்கு எதிராக திரும்பும் வன்னியர் வாக்கு! தலித் வாக்குகளை பிரிக்கும் விஜய் -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
வட தமிழகத்தில் திமுகவுக்கு சிக்கல்? வன்னியர்கள் ஓட்டு மொத்தமா காலி? வேல்முருகன் முடிவால் நெருக்கடி! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்! -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்? -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
நள்ளிரவில் ‘செக்’ வைக்கும் காக்கிகள்.. சென்னையில் இரவு நேரத்தில் வெளியே போறீங்களா? இதை நோட் பண்ணுங்க -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட் -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
எடப்பாடி பழனிசாமிக்கே ஷாக்.. மாப்பிள்ளை அவர் தான்.. ஆனால் சட்டை? பாஜக வெயிட்டிங் கேம் பின்னணி என்ன?
















Click it and Unblock the Notifications