மாறிய காலம்: கருணாநிதி நல்லடக்கத்திற்கு மெரினாவில் இடமில்லை! அதிமுக ஆபீஸ்வர எடப்பாடியால் முடியவில்லை
சென்னை: அதிமுக மோதல் விவகாரத்தில் இத்தனை நாட்களாக ஆளும் திமுக அரசு மௌனம் காத்து வந்தது. இவ்வளவு அமைதியாக இருந்த திமுக அரசு முதல்முறையாக அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது. அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்ததன் மூலம் திமுக இந்த விவகாரத்தில் முதல்முறையாக தலையிட்டுள்ளது.
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுகவில் பொதுக்குழுவில் எடப்பாடி இடைக்கால பொதுச்செயலாளர் ஆனார். ஆனால் பெயருக்கு பின் பொதுச்செயலாளர் என்ற பதவியுடன் எடப்பாடி பழனிசாமி அதிமுக அலுவலகத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதிமுக அலுவலகம் சென்று தொண்டர்களை சந்திக்க முடியாத நிலை எடப்பாடிக்கு ஏற்பட்டுள்ளது. அதிமுக அலுவலகத்திற்கே மொத்தமாக தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு ஒரு பக்கம் நடக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்தை இன்று கைப்பற்றினார். ஓ பன்னீர்செல்வம் வருவார் என்பதை அறிந்து இன்று காலையே எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களை அங்கே நிறுத்தி இருந்தார். இதனால் எடப்பாடி - ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இடையே அங்கு மோதல் ஏற்பட்டது. இதனால் கல் வீச்சு, கை கலப்பு என்று கடுமையான மோதல் ஏற்பட்டது.

காயம்
ரத்த காயம் ஏற்படும் அளவிற்கு நிர்வாகிகள் மோதிக்கொண்டனர். இதையடுத்து அங்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். மோதல்களுக்கு இடையே அதிமுக அலுவலக கதவுகளை உடைத்து ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் உள்ளே சென்றார். இதற்கு இடையில் ஓ பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்குவதாக வானகரத்தில் அதிமுக பொதுக்குழு அறிவித்தது. ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆகியோரை மொத்தமாக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமியும் அறிவித்தார்.

மாறி மாறி நீக்கம்
இதற்கு பதிலடியாக இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியை நீக்குவதாக அறிவித்தார். இதனால் அதிமுக அலுவலகம் யாருக்கு சொந்தம் என்ற கேள்வி எழுந்தது. எடப்பாடி - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே இதனால் ராயப்பேட்டையில் மோதல் வெடித்தது. இந்த மோதல் காரணமாக அதிமுக அலுவலகத்திற்கு வெளியே பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அங்கு போலீசார் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டனர்.

சீல்
இதனால் இன்று மாலை அதிமுக அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி வரும் பட்சத்தில் இரண்டு தரப்பிற்கும் பெரிய அளவில் வன்முறை வெடிக்கும் அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில் மோதலை தடுக்கும் விதமாக, சட்ட ஒழுங்கு கருதி அங்கு போலீஸ் குவிக்கப்பட்டது,. அதோடு வருவாய் துறை அதிகாரிகள் மூலம் அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. உள்ளே இருந்த ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்கள் வெளியேற்றப்பட்டு மொத்தமாக அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.

எடப்பாடி
ஓபிஎஸ் - இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலை தவிர்க்கும் வகையில் தற்போது அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிமுக யாருக்கும் சொந்தம் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அலுவலகத்திற்கு பூட்டு போடப்பட்டது. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்ததும் அதிமுக தலைமையகத்திற்கு போக விரும்பி இருப்பார். பொதுச்செயலாளராக அலுவலகம் செல்லும் திட்டத்தில் அவர் இருந்திருப்பார்.

சீல்
ஆனால் அதிமுக அலுவலகத்திற்கு எடப்பாடி போக முடியாத வகையில் அதற்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது முதல்வர் ஸ்டாலின் அரசு. இதனால் எடப்பாடி பொதுச்செயலாளராக இன்று அதிமுக அலுவலகம் செல்ல முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது. 2018 ஆகஸ்ட் 7ம் தேதி முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைந்த போது அப்போது கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் மறுத்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஸ்டாலின் இரண்டு முறை போய் கேட்டும் எடப்பாடி அனுமதி கொடுக்கவில்லை.
Recommended Video

செல்ல முடியாது
நேரடியாக கேட்டு, கடிதம் அனுப்பியும் கூட எடப்பாடி பழனிசாமி மெரினாவில் இடம் மறுத்தார். இதையடுத்து ஸ்டாலின் அன்று இரவே அவசர வழக்கு தொடுத்தார். வழக்கிலும் ஆளும் அதிமுக தரப்பு கடும் வாதங்களை வைத்தது. ஆனால் சட்ட போராட்டம் மூலம் வென்று கருணாநிதி உடலை ஸ்டாலின் மெரினாவில் அடக்கம் செய்தார். இந்த நிலையில்தான் தற்போது எடப்பாடி அதிமுக அலுவலகம் போக முடியாமல் சீல் வைக்க உத்தரவிட்டுள்ளது முதல்வர் ஸ்டாலின் அரசு.
-
“வீட்டுச் சிறையில் கருணாநிதி? அதிமுக ஆட்சி அமைந்ததும் விசாரித்து தண்டனை கொடுப்போம்”- எடப்பாடி பேச்சு -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
ஏ.சி.சண்முகம் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக தலைமை.. தாமரை சின்னத்தில் போட்டியிட சீட் இல்லை! -
சுந்தர்.சி-க்காக தேர்தல் பணியில் இறங்கிய மன்னன் டீம்! மதுரை மத்தியில் பலன் அளிக்குமா அதிமுக வியூகம்? -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ்












Click it and Unblock the Notifications