எடப்பாடி முதல்வராக கூடாது.. ஓ.எஸ்.மணியன் டார்கெட் அதுதான்.. அதிமுக நிர்வாகியின் பகீர் குற்றச்சாட்டு!
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தோல்வி அடையக் கூடிய வேட்பாளர்களையே பரிந்துரை செய்துள்ளதாக அதிமுக நிர்வாகி செந்தில்நாதன் குற்றம்சாட்டியுள்ளார். ஓ.எஸ்.மணியன் சாதி பார்த்தே ஒவ்வொரு நபருக்கும் மரியாதை கொடுப்பார் என்று குற்றம்சாட்டிய அவர், ஓ.எஸ்.மணியன் இருக்கும் வரை நாங்கள் புறக்கணிக்கப்பட்டு கொண்டே இருப்போம் என்று கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்ட சூழலில், அதிமுகவில் சீட் கிடைக்கவில்லை என்ற அதிருப்தியில் பலரும் விலக தொடங்கி இருக்கின்றனர். கள்ளக்குறிச்சியில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் அக்கட்சியின் நகரச் செயலாளர் பாபு ராஜினாமா கடிதம் வழங்கிவிட்டு, தரையில் விழுந்து வணங்கி சென்றார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தின் அதிமுக நிர்வாகி செந்தில்நாதன் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதில் அதிமுக நிர்வாகி செந்தில்நாதன் பேசுகையில், உழைத்தவர்களை வெளியேற்றிவிட்டு தகுதியில்லாதவர்களுக்கு பதவி வழங்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக வரக் கூடாது என்ற நோக்கில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வேட்பாளர்களை பரிந்துரை செய்துள்ளார்கள்.
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மற்றும் பவுன்ராஜ் இருவரும் அப்படிதான் செயல்படுகிறார்கள். கடந்த முறையும் சீட் கொடுக்கப்படவில்லை. இந்த முறையும் சீட் அளிக்கப்படவில்லை. இதனால் அதிமுக ஒன்றிய கழகச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சாதாரண தொண்டனாகவே தொடர விரும்புகிறேன். எடப்பாடி பழனிசாமி 5 நாட்களுக்கு முன் சந்தித்தேன்.
அப்போதே தொகுதியை கூட்டணிக்கு கொடுப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் பவுன்ராஜ் எப்படியாவது தொகுதியை பெற்றுவிடுவேன் என்றார். பின்னர் தொகுதி கூட்டணிக்கு அளிக்கப்பட்ட பின், என்னை கட்சிப் பணிக்கு அழைத்தார்கள். பவுன்ராஜ் என்னை தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் சென்னை சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்த போதும், எதுவும் நடக்கவில்லை.
நான் எந்த இயக்கத்திலும் சேரப் போவதில்லை. அதிமுக தொண்டனாகவே தொடருவேன். எங்கள் ஆதங்கத்தை எடப்பாடி பழனிசாமியிடம் சொல்லுகிறோம். ஓ.எஸ்.மணியன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோரால் மயிலாடுதுறையில் அதிமுக கூடாரம் காலியாகிக் கொண்டே செல்கிறது. இதனை தாங்கி கொள்ள முடியவில்லை. நாங்கள் வஞ்சிக்கப்படுகிறோம். பவுன்ராஜ் 5 முறை தேர்தலில் போட்டியிட்டு 2 முறை தான் வென்றுள்ளார்.
அவர்கள் இருவரும் இருக்கும் வரை நாங்கள் புறக்கணிக்கப்பட்டு கொண்டே இருப்போம். ஓ.எஸ்.மணியன் சாதி பார்ப்பார். அவரின் சாதி என்றால் ஒரு மரியாதை கொடுப்பார். இல்லையென்றால் மரியாதை இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
-
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்! -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி












Click it and Unblock the Notifications