நிலம் அபகரிப்பு.. தலைமறைவான அதிமுக ஊராட்சி மன்றத் தலைவி அமுதாவை பதவி நீக்கம் செய்ய ஐகோர்ட் உத்தரவு
சென்னை: போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள சேரன்குளம் ஊராட்சி மன்றத் தலைவி அமுதாவை பதவி நீக்கம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கர்த்தநாதபுரத்தைத் சேர்ந்த ஆர்.ரோஸ்லின் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "எனது மாமியார் ஞானம்பாள் உயிரோடு இருக்கும்போதே அவர் இறந்து விட்டதாக போலியான இறப்புச் சான்றிதழ் தயாரித்தும், எனக்கு பதிலாக வேறு ஒரு பெண்ணைக் கொண்டு ஆள்மாறாட்டம் செய்தும் ரூ.20 கோடி மதிப்பிலான 10 கிரவுண்ட் நிலத்தை அபகரித்து மோசடியான கிரயப்பத்திரம் தயார் செய்துள்ளனர்.

இந்த மோசடியில் அதிமுகவைச் சேர்ந்த சேரன்குளம் ஊராட்சி மன்றத் தலைவி அமுதா உளிட்டோர் மீது குற்றம்சாட்டிய ரோஸ்லின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது.
இந்நிலையில், சிபிசிஐடி உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது,ஊராட்சி மன்றத் தலைவி அமுதா இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும், அவரை தேடி வருவதாகவும் சிபிசிஐடி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், ஊராட்சி மன்றத் தலைவி அமுதா இன்னும் தலைமறைவாக உள்ளதால் அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டுமென திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், அமுதாவை கைது செய்வதற்கான நடவடிக்கையை தொடர சிபிசிஐடிக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
உச்ச நீதிமன்றம் செல்வேன்.. இறுதியில் வெற்றி எனக்கே! நம்பிக்கையோடு சொன்ன இன்பதுரை -
பக்ரீத் பண்டிகை: பசு, கன்றுகள் வதைக்கு தடை.. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தியதாக தமிழக அரசு விளக்கம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications