விஜய்க்கு ஆதரவு! சட்டமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு! பதவிக்கு ஆசைப்படவில்லை என இபிஎஸ்க்கு பதில்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மையை நிரூபிக்க இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் பேசிய அதிமுகவின் இன்னொரு பிரிவான எஸ்.பி.வேலுமணி, "அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் விஜய்க்கு ஆதரவளிக்கிறது. நாங்கள் பதவிக்காக ஆசைப்படுபவர்கள் கிடையாது" என்று பேசியிருக்கிறார்.
நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். முன்னதாக பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எங்கள் கட்சி தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்காது என்று கூறியிருந்தார். சிலர் பதவி ஆசையில் செயல்படுவதாகவும் விமர்சித்திருந்தார்.

இதனை தொடர்ந்து அதிமுக எம்எல்ஏ எஸ்.பி.வேலுமணி பேச வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதற்கு அதிமுக தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கெனவே அதிமுக எம்எல்ஏக்களில் ஒரு பிரிவினர் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் விஜய்யை சந்தித்து நேற்று ஆதரவு தெரிவித்திருந்தனர். எனவே, சட்டமன்றத்தில் இந்த ஆதரவு உறுதி செய்யப்படக்கூடாது என்பதால், எஸ்.பி.வேலுமணி பேசுவதற்கு எடப்பாடி தலைமையிலான மற்றொரு கோஷ்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
ஆனால், யாரை பேச அனுமதிப்பது என்பது தன்னுடைய உரிமை என்று கூறிய சபாநாயகர், எஸ்.பி.வேலுமணியை பேச அனுமதித்தார். இதனையடுத்து பேசிய எஸ்.பி.வேலுமணி, "விஜய்க்கு அனைத்திந்திய அண்ணா திராவிட கழகம் விஜய்க்கு ஆதரவளிக்கிறது. முன்னாள் முதலமைச்சர் அம்மா ஜெயலலிதா கொண்டு வந்த 100 யூனிட் இலவச மின்சாரத்தை விஜய் 200 யூனிட் இலவச மின்சாரம் என்று மாற்றியிருக்கிறார். அதற்காக முதலமைச்சருக்கு நன்றி. இப்படியாக அம்மாவின் திட்டங்களை இந்த அரசு முன்னெடுக்க வேண்டும்.
மக்கள் தீர்ப்பளித்து, முதலமைச்சருக்கு வாக்களித்துள்ளார்கள். அதற்கு அதிமுக சார்பாக ஆதரவளிக்கிறோம். அதேபோல நாங்கள் யாரும் எந்த பதவிக்கும் ஆசைப்படுபவர்கள் கிடையாது. எனவே முதலமைச்சர் கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications