அதிமுகவில் 2 மாவட்ட செயலாளர்கள் அதிரடியாக மாற்றம்.. எடப்பாடி பழனிசாமி உத்தரவு!
சென்னை: அதிமுகவில் 2 மாவட்ட செயலாளர்களை மாற்றி அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். வடசென்னை வடக்கு (மேற்கு), கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் எம்.பி வெங்கடேஷ் பாபு, ஜான் தங்கம் ஆகியோர் கட்சியின் அமைப்புச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

2026 சட்டப் பேரவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது? தேர்தல் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது? என்பது குறித்து மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2 நாட்களாக நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில், சட்டசபை தேர்தலுக்கு 10 மாத காலமே உள்ள நிலையில் பூத் கமிட்டியை வலுப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வாக்குச்சாவடிகளுக்கு முகவர்களை நியமித்து அதற்கான பட்டியலை தலைமையிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு pic.twitter.com/3N7kiBxv6e
— AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@AIADMKOfficial) June 27, 2025
இந்நிலையில், அ.தி.மு.க வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி வெங்கடேஷ் பாபு பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ புரசை வி.எஸ்.பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெங்கடேஷ் பாபு அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜான் தங்கம் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக ஜெயசுதர்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜான் தங்கம், அதிமுக அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications