மர்மம்.. மாஜி அமைச்சர் மணிகண்டன் எங்கே? நடிகை சாந்தினி வழக்கில் உச்சகட்ட பரபரப்பு
சென்னை: நடிகை சாந்தினி கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவர் எங்கே இருக்கிறார் என்பது மர்மமாகவே இருக்கிறது.
சென்னையில் ஐந்து வருடகாலம் கணவன் மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்தோம் என்று முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது திரைப்பட துணை நடிகை சாந்தினி அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
மணிகண்டனால் கர்ப்பம் அடைந்து மூன்று முறை மருத்துவமனையில் கருக்கலைப்பு செய்ததாக அதிர்ச்சி தகவலை அந்த புகாரில் அவர் கூறியிருந்தார்.

தனிப்படை
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்துவதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர். கருக்கலைப்பு மாத்திரையை வாங்கப்பட்டது ராமநாதபுரம் மாவட்டத்தில் என்று சாட்டிங் உரையாடலில் தெரிவிக்கப்பட்டு இருப்பதை போலீசில் சாந்தினி தெரிவித்திருந்தார். எனவே ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு தனிப்படை விரைந்துள்ளது.

எங்கே இருக்கிறார்
இப்படியாக பல தரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள மணிகண்டனிடம் விசாரணை நடத்துவதற்காக அவரைத் தொடர்பு கொள்ளும் போது அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்று தகவல் வருகிறது. சென்னையில் ஏதோ ஒரு இடத்தில் அவர் தலைமறைவாக இருக்கிறார். காவல்துறை விசாரணைக்கு அவர் இதுவரை ஒத்துழைக்கவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video

கைது செய்ய தீவிரம்
மணிகண்டன் எங்கு இருக்கிறார் என்பது கண்டறியப்பட்டால் அவரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்த தேவை ஏற்படும் என்று போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. மணிகண்டன் எங்கே என்பது தெரியாததால் இந்த வழக்கில் உச்ச கட்ட பரபரப்பு நிலவி வருகிறது. அவர் எந்த நேரத்திலும் போலீசாரால் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

குற்றச்சாட்டை மறுத்தார்
நடிகை சாந்தினி தன்னிடம் பணம் பறிப்பதற்காக இவ்வாறு பொய் புகார் அளித்ததாக ஏற்கனவே மணிகண்டன் கூறியிருந்தார். இன்னொரு பக்கம் ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியிடம் மணிகண்டன் மனைவி ஒரு புகார் அளித்து இருந்தார். அதில் சாந்தினியால் தங்கள் குடும்பத்திற்கு மன உளைச்சல் ஏற்படுவதாகவும் அவர் புகாரில் உண்மை இல்லை என்றும் தெரிவித்து இருந்தார். இப்படியாக புகாரை மறுத்து வந்த நிலையில் காவல்துறையின் விசாரணைக்கு ஏன் அவர், ஆஜராகவில்லை என்பது இப்போது எழுந்துள்ள மிகப் பெரிய கேள்வியாக மாறியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications