சாலை மறியல் வழக்கில் ஜாமீன் பெற்றார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது சாலை மறியலில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
தமிழகத்தில் கடந்த 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது சென்னையில் 49-வது வார்டு வாக்குச்சாவடி ஒன்றில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயல்வதாக கூறப்பட்டது.

தாக்க சொன்ன ஜெயக்குமார்
இதனைத் தொடர்ந்து அங்கு சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர் திமுக தொண்டர் ஒருவரைப் பிடித்து அரை நிர்வாணப்படுத்தி தாக்கினர். இத்தனையும் ஜெயக்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

ஜெயக்குமார் கைது
இதனடிப்படையில் ஜெயக்குமார் மீது 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 21-ந் தேதி ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அவரது மகன் உள்ளிட்ட ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அதிமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

சாலை மறியல் கேஸில் ஜாமீன்
இந்த வழக்கில் தமக்கு ஜாமீன் கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஏற்கனவே டிஸ்மிஸ் செய்துவிட்டது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது சாலை மறியலில் ஈடுபட்டதாக ஜெயக்குமார் மீது வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம்.

தாக்குதல் வழக்கில் ஜாமீன் கிடைக்குமா?
இதனிடையே திமுக தொண்டர் தாக்கப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனுத் தாக்கல் செய்தார். ஜெயக்குமாருக்கு ஜாமீன் தர மனுதாரர் நரேஷ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அதேநேரத்தில் காவல்துறை தரப்பில் தங்களிடம் மனு தரப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறைக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த விவரங்களை கொடுக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டார். மேலும் புகார்தாரர் நரேஷ் தங்களது ஆட்சேபனையை இடையீட்டு மனுவாகத் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். ஜெயக்குமார் ஜாமீன் மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.
-
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications