சீக்ரெட்டாக காய் நகர்த்திய அதிமுக.. திமுகவை விடாதீங்க.. களமிறங்கிய "பிரபல ஐடிகள்".. எடப்பாடி ஆக்சன்
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் திமுகவிற்கு எதிராக தீவிரமான பிரச்சாரங்களை முன்னெடுக்க அதிமுக திட்டமிட்டு வருகிறது. இதற்காக சோஷியல் மீடியாவில் முக்கியமான கைகளை களமிறக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாம்.
லோக்சபா தேர்தல் தொடர்பாக வரிசையாக சர்வேக்கள் வெளியாகி வருகின்றன. இந்த சர்வேக்கள் பல்வேறு அதிர்ச்சி தரும் சுவாரசியமான விஷயங்களை வெளியிட்டு வருகின்றன. டைம்ஸ் நவ் - மேட்ரைஸ் என்சி இது தொடர்பாக கருத்து கணிப்புகளை மேற்கொண்டு உள்ளன.

கணிப்பு: அதில், திமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் 59.7 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல் பாஜக 20.6 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதிமுக 16 சதவிகித கருத்து கணிப்புகளை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அதாவது இந்த முறை பாஜக அதிமுகவை விட அதிக வாக்குகள் பெறும். முதல்முறையாக பாஜகவின் வாக்கு வங்கி அதிமுகவை முந்தும். தமிழ்நாட்டில் பாஜக இரண்டாம் இடத்தை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
எடப்பாடிக்கு அது பெரிய சறுக்கல்: பொதுவாக அதிமுக ஜெயலலிதா மறைவிற்கு பின் ஒரு தேர்தலில் கூட வெற்றிபெறவில்லை. ஆனாலும் வாக்கு சதவிகிதம் 30-40 என்ற அளவில் எடுக்கும். கடந்த சட்டசபை தேர்தலில் கூட 39.72 சதவிகிதம் வாக்குகளை அதிமுக வென்றது. திமுக 45.38% வாக்குகளை வென்றது. அதேபோல் 2019 லோக்சபா தேர்தலில் 30.56% சதவிகிதம் வாக்குகளை அதிமுக வென்றது. திமுக 53.15% வாக்குகளை வென்றது.
இந்தியா டுடே சர்வே: இந்தியா டுடேவின் மூட் ஆப் தி நேஷன் சர்வேவில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 இடங்களிலும் வெல்லும். கடந்த முறை 38 இடங்களில் வென்றது. இந்த முறை.. ரவீந்திரநாத் எம்பி வென்ற இடத்தையும் சேர்த்து 39 இடங்களிலும் திமுகவே வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் வாக்கு வங்கி 47 சதவிகிதம் ஆக இருக்கும். பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லாது. ஆனால் வாக்கு வங்கி 15 சதவிகிதம் ஆக உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதில் அதிமுக வாக்கு வங்கி கூறப்படவில்லை. மாறாக "others" என்று கூறி.. மொத்தமாக மற்ற கட்சிகளின் வாக்கு வங்கி 38 சதவிகிதம் என்று கூறப்பட்டு உள்ளது.
பின்னடைவு: இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலில் தற்போது கருத்து கணிப்புகளில் பின்னடைவை சந்தித்துள்ள அதிமுக.. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் திமுகவிற்கு எதிராக தீவிரமான பிரச்சாரங்களை முன்னெடுக்க அதிமுக திட்டமிட்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக பிரபல ட்விட்டர் ஐடிக்கள் பிரச்சாரத்திற்காக களமிறக்கப்பட்டு உள்ளதாம். முக்கியமாக திமுகவின் சிறு சிறு தவறுகளை கூட எடுத்துக்காட்டுவது, ஒவ்வொரு தொகுதியிலும் நடந்த பிரச்சனைகளை மக்கள் இடையே கொண்டு செல்வது என்று பல்வேறு விஷயங்களை செய்வதற்காக பிரபல "ப்ளூ டிக்" ஐடிக்கள் பல களமிறக்கப்பட உள்ளதாம்.
முக்கியமாக கிளாம்பாக்கத்தில் நிலவி வரும் பிரச்சனைகள், சென்னை வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், சாலை பிரச்சனை , அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் உள்ளிட்டவற்றை பிரபலப்படுத்த அதிமுக தரப்பு முடிவு செய்துள்ளதாம்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications