Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதாவ பாத்தாரு.. ஜெயலலிதாவா தன்னை நெனச்சிகிட்டாரு! இப்போ மாறிட்டாரு! குமுறும் அதிமுக சீனியர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது முக்கிய முன்னாள் அமைச்சர்களும் கட்சியில் சீனியர்களும் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. செல்லூர் ராஜு, தம்பிதுரை, தங்கமணி போன்ற மூத்த முன்னோடிகள் எடப்பாடி பழனிச்சாமியால் அவமதிக்கப்பட்டதாகவும் சொல்லும் அதிமுகவினர், ஜெயலலிதா போலவே தன்னை எடப்பாடி பழனிச்சாமி நினைத்துக் கொள்கிறார் என குமுறுகின்றனர்.

அதிமுகவில் இரும்பு பெண்மணியாக வளம் வந்தவர் ஜெயலலிதா. கட்சியிலும் ஆட்சியிலும் அவர் வைத்தது தான் சட்டம். யார் எப்போது எந்த பதவியில் இருப்பார்கள், எந்த பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்படுவார்கள் என்பது யாருக்குமே தெரியாது.

ஒவ்வொரு நாளும் காலையில் செய்தித்தாளை பார்த்தால் தான் தங்களுக்கு பதவி இருக்கிறதா? இல்லையா? என்பதை அமைச்சர்களுக்கும் கட்சியினருக்கும் தெரியும். சிறு குற்றச்சாட்டு வந்தாலும் அவர்களை தூக்கி அடிக்க ஜெயலலிதா தயங்கியதில்லை. ராணுவ கட்டுப்பாட்டோடு கட்சியை வைத்திருந்தார் என சொல்வார்கள்.

AIADMK Senior Leaders Rebel

ஜெயலலிதா பாணி

ஆனால், அவரது மறைவுக்கு பின் அதிமுக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி தவிக்கிறது. இருந்த போதும் தனது சாதுர்யமான அரசியல் நகர்வுகளால் எடப்பாடி பழனிச்சாமி தன்னை அதிமுகவின் மூன்றாம் தலைமுறை தலைவராக நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் கட்சியினரை மதிப்பதில்லை, ஆதிக்க மனப்பான்மையோடு நடந்து கொள்கிறார். தன்னை இன்னொரு ஜெயலலிதா என நினைத்துக் கொண்டு உலா வருகிறார் எடப்பாடி என கட்சி சீனியர்களே குமுறுகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடியையோ, அதிமுகவையோ விமர்சித்து பேசினாலே கட்சியில் இருந்து நீக்கம் அல்லது ஓரம் கட்டப்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். அதனால்தான் அன்வர் ராஜா, மைத்ரேயன் போன்ற திமுகவுக்கு தாவி விட்டதாக சொல்கின்றனர். மேலும் சில நிர்வாகிகளும் திமுகவுக்கு செல்லலாம் என சொல்லப்படுகிறது. கிளை கழக செயலாளராக இருந்து எம்பி, எம்எல்ஏ, அமைச்சராக இருந்தாலும் ஜெயலலிதா இருந்தவரை எடப்பாடி பழனிச்சாமி யார் என்று சேலத்தை தவிர வேறு யாருக்கும் தெரியாது.

அதிமுக மூத்தவர்கள்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா, தனக்கு விசுவாசமாக இருப்பார் என எடப்பாடியை முதல்வர் ஆக்கினார். எந்த அளவு பணிவு காட்டினாரோ அதே அளவு எதிர்ப்பையும் காட்டி தன்னை முதல்வராகிய சசிகலாவை கட்சியை விட்டு தூக்கினார். மேலும் தான் முதல்வராவதற்கு உறுதுணையாக இருந்த டிடிவி தினகரனையும் கட்சியை விட்டு நீக்கினார். நான்கு ஆண்டுகள் ஆட்சியை நடத்த உதவிய ஓ.பன்னீர்செல்வத்தையும் தூக்கி அடித்து விட்டார்.

தங்கமணி, வேலுமணி

இப்படி தனக்கு உதவியவர்கள் எல்லோரையும் கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி பழனிச்சாமி தனது தீவிர ஆதரவாளர்களையும் மதிப்பதில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது. டெல்லியோடு மிகுந்த நெருக்கம் காட்டிய தங்கமணி வேலுமணியை ஓரம் கட்டியது, அடுத்த முதல்வர் என கூறப்பட்ட செங்கோட்டையனை கட்டம் கட்டியது, தனக்கு மிகவும் விசுவாசமாக இருந்த செல்லூர் ராஜூவை திமுக அமைச்சர்களுடன் பேசினார் என்பதற்காக காரில் ஏற்றாதது, தான் அருகில் இருக்கும் போதே செய்தியாளர்களுக்கு பதிலளிக்க முயன்ற தம்பி துரையை அதட்டியது என நாளுக்கு நாள் எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருக்கிறது.

அதிமுக தலைமை

தன்னை இன்னொரு ஜெயலலிதா என்று நினைத்துக் கொண்டு கட்சியினர் மீது அதிகாரம் செலுத்தி வருகிறார். ஒரு நல்ல தலைவருக்கு தலைமை பண்பு அவசியம் ஆனால். ஆதிக்கம் மனப்பான்மையும், அகங்காரமும் இருக்கக் கூடாது என அதிமுகவினரே சொல்கின்றனர். ஜெயலலிதா இருந்த காலம் வேறு கட்சி வேறு. ஆனால் தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பல நெருக்கடிகள் இருக்கும் நிலையில் சீனியர்களை மதிக்காமல் செயல்படுவது கட்சிக்கு நல்லதல்ல என்கின்றனர்.

திமுக திட்டம்

அதே நேரத்தில் அதிமுக மூத்த முன்னோடிகள் அதிருப்தியில் இருப்பதை அறிந்த திமுக தரப்பு அவர்களை வளைத்து போடவும் காய் நகர்த்தி வருகிறது. இதற்காக கொங்கு மண்டலத்தில் இருக்கும் மூத்த அமைச்சர்கள் களமிறங்கி இருக்கின்றனர். வரும் காலங்களில் திமுகவுக்கு தாவும் அதிமுக புள்ளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+