விஸ்வரூபம் எடுக்கும் கலகக் குரல்... வரும் 12-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
சென்னை: அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்ற குரல் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 12-ந் தேதி நடைபெற உள்ளது.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பொதுச்செயலர் பதவி காலியாக உள்ளது. தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் என அதிமுக கூட்டுத் தலைமையின் கீழ் அதிமுக இயங்கி வருகிறது.

ஆட்சியிலும் கட்சியிலும் தமது கை ஓங்கி இருக்க வேண்டும் என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வியூகம். அதே நேரத்தில் கட்சியில் தமது கை ஓங்க வேண்டும் என நினைக்கிறார் துணை முதல்வர் ஓபிஎஸ்.
தற்போது அதிமுக ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகளாகத்தான் இருக்கிறது. இந்நிலையில்தான் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை; கூட்டுத் தலைமையால் முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது என மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா போர்க்கொடி தூக்கினார்.
அவருக்கு ஆதரவாக குன்னம் எம்.எல்.ஏ.ராமச்சந்திரனும் குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் அமைச்சர்களோ முதல்வர் ஓபிஎஸ்ஸை ஆதரிக்கின்றனர். இதனால் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 12-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டதிலும் ஒற்றைத் தலைமைதான் தேவை என்கிற குரல் எழக் கூடும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications