Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

போதைப்பொருள் புழக்கம் பெரும் தலைகுனிவு.. கொந்தளித்த எடப்பாடி! அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து இருப்பதை தடுக்க வலியுறுத்தி தமிழகத்தின் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஜெயக்குமார், தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

திமுக முன்னாள் நிர்வாகியும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி தலைமறைவாகியுள்ளார். டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ஜாபர் சாதிக்கிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து அவரை தேடி வருகின்றனர். இதனிடையே, தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாகவும் அதனை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

AIADMK to stage demonstrations Across TN today against DMK Govt on Drug issue

இதன்படி மாவட்ட தலைநகரங்களில் இன்று காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தை அதிமுகவினர் தொடங்கினர். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தம்பிதுரை உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது திமுக அரசுக்கு எதிராகவும், போதைப்பொருள் பரவுவதை தடுக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.

முன்னதாக இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவ்து:- 32 மாத காலமாக தமிழ் நாட்டில் போதைப் பொருட்களினுடைய புழக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்பதை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எப்போதெல்லாம் சட்டமன்றத்தில் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் தொடர்ந்து நான் வெளிப்படுத்தி, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

அதே போல, சட்டமன்றத்திற்கு வெளியேயும், தொடர்ச்சியான போராட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்கள் மூலமாகவும், செய்தியாளர்கள் சந்திப்பிலும், அறிக்கைகளின் வாயிலாகவும் அவ்வப்போது நான் சுட்டிக் காட்டி உள்ளேன். போதைப் பொருள் புழக்கம் அதிகரிப்பினால் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட இளைஞர்களுடைய வாழ்க்கை மிகப் பெரிய அளவிலே பாதிப்புக்குள்ளாகி இருப்பதையும் மீண்டும் மீண்டும் நான் சுட்டிக்காட்டி வந்துள்ளேன்.

அப்படி இருந்தும் இந்த விடியா திமுக அரசு கண்டும் காணாமல், வாய்மூடி மவுனியாக இன்றுவரை இருந்துகொண்டு இருக்கிறதே ஒழிய, போதைப் பொருள் புழக்கத்தைத் தடுப்பதற்கான எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஏற்கெனவே, தமிழ் நாட்டில் கள்ளச் சாராயத்தால் 26 பேர் பலியாகி அந்தக் குடும்பங்கள் நடுத் தெருவிலே நிற்கின்ற நிலை உருவாகி உள்ளது. இது எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல், தற்போது வெளியாகி இருக்கின்ற செய்தி, தமிழ் நாட்டு மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியா முழுவதும், தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கின்ற ஆளும் திமுக கட்சியை ஓர் அச்சத்தோடு பார்க்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் போதைப் பொருட்களை புழக்கத்தில் விடுகின்ற கும்பலை, அந்த நாடுகளுடைய காவல் துறை தேடி வந்த நிலையில், அவர்கள் இந்தியாவிலே இருக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்த பிறகு, Narcotics Control Bureau என்று சொல்லப்படுகின்ற NCB அமைப்பும், இந்த போதைப் பொருட்களைத் தடுப்பதற்காக இயங்குகின்ற டெல்லியினுடைய சிறப்பு போலீஸ் அமைப்பும் இணைந்து நடத்திய சோதனையில், டெல்லியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவருமே தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, இந்த கும்பலுடைய தலைவனாக செயல்பட்டவர் சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி துணை அமைப்பாளர் அ. ஜாபர் சாதிக் தான் என்ற செய்தியும், அவரை காவல் துறை தேடுகிறது என்ற செய்தியும் வந்தபோதுதான், உண்மையிலேயே தமிழக மக்கள் அனைவரும் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஜாபர் சாதிக், விடியா திமுக அரசின் முதலமைச்சருடனும், விளையாட்டுத் துறை அமைச்சருடனும், மேலும் பல அமைச்சர்களுடனும் எடுத்துள்ள புகைப்படங்கள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் வெளிவந்துள்ளன. இந்த அரசியல் பின்புலத்தை வைத்துக்கொண்டு ஜாபர் சாதிக் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருப்பது தமிழ் நாட்டிற்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரிய தலைகுனிவாகும்.

இன்று, தமிழ் நாட்டைத் தாண்டி, இந்தியாவைத் தாண்டி, உலகம் முழுவதும் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்களின் தலைவனாக செயல்பட்டுள்ள திமுக-வைச் சேர்ந்த ஜாபர் சாதிக்கால் தமிழ் நாட்டிற்கே மிகப் பெரிய தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. விடியா திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து சட்டம் - ஒழுங்கு முற்றிலுமாக சீர்கேடு அடைந்துள்ளதற்கும்; தமிழகம் போதைப் பொருட்களின் கேந்திரமாக மாறி, வருங்கால தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிந்து வருவதற்கும்;

போதைப் பொருள் கடத்தலால் இந்திய அளவில் தமிழ் நாட்டிற்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதற்கும் காரணமான விடியா திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி, மாணவர் அணி ஆகிய சார்பு அமைப்புகளின் சார்பில், 4.3.2024 (இன்று) திங்கட் கிழமை காலை 10 மணியளவில், வருவாய் மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை, வருவாய் மாவட்டங்களில் கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ் நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ள நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்களில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+