செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து வெளியேற்றம்? எடப்பாடி கையில் பிரம்மாஸ்திரம்! அடுத்த பிளான் ரெடி!
சென்னை: அதிமுகவில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கும் நிலையில் செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் ஆலோசனையும் நடத்தியுள்ளார். இதற்கிடையே சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை சந்திக்க செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த அதிமுக சசிகலாவின் கடிதத்திற்குப் பிறகு பரபரப்பில் சிக்கியுள்ளது. ஓபிஎஸ் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி முழுமையாகக் கட்சியை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்.
மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை அதிமுகவில் வலுத்து வருகிறது.

எடப்பாடி பழனிசாமி
2019 மக்களவைத் தேர்தல் தொடங்கி தற்போது வரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சில முன்னாள் அமைச்சர்கள் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கடந்த சில தினங்களுக்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதினார்.
2026 தேர்தல்
அதில், திமுகவை வீழ்த்தி 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். மேலும் கட்சி பிளவுபட்டு விடக்கூடாது என்பதற்காகவே தான் இவ்வளவு நாள் அமைதியாக இருந்ததாகவும், இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என சற்று ஆவேசமாகவே அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். சசிகலா கடிதம் எழுதிய அடுத்த நாளே ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றனும் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகள் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
சசிகலா கடிதம்
அடுத்தடுத்த நாட்களில், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரும் இதே கருத்தை வலியுறுத்திய நிலையில் தன் பங்குக்கு செப்டம்பர் ஒன்றாம் தேதி பரபரப்பைக் கிளப்பினார் செங்கோட்டையன். செப்டம்பர் 1ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அவர் செப்டம்பர் 5ஆம் தேதி மனம் திறந்து பேசுவேன் எனக் கூறியிருந்தார். இதனால் அதிமுகவில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என கெடு விதித்தார்.
செங்கோட்டையன் நீக்கம்
இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக திண்டுக்கல் வந்துள்ள எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் திண்டுக்கல் சீனிவாசன், கேபி முனுசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். தற்போது கிடைத்த தகவலின்படி செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அதிமுக பிளவு
எப்படியும் எடப்பாடி பழனிசாமி தனக்கு எதிராக திரும்புவார் என ஏற்கனவே உணர்ந்திருந்த செங்கோட்டையன் அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகி வருகிறார். தன்னைக் குறித்து எந்த அறிவிப்பு வந்தாலும் உடனடியாக சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை சந்திக்க செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் பிரிந்து சென்றவர்களை ஒரு அணியாக திரட்டி அதிமுகவுக்கு எதிராக வழக்கு தொடரலாம் எனவும் சொல்லப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications