விஜய் எடுக்கும் ஒரேயொரு முடிவு.. தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும்.. பத்திரிகையாளர் மணி!
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக இணைந்தால், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி என்று பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். ஆனால் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு தவெக உடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என்று நம்பவில்லை என்று கூறியுள்ள அவர், 4 முனைப் போட்டி என்று தேர்தல் நடந்தால், அது திமுகவுக்கு சாதகமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், நாளுக்கு நாள் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. திமுக கூட்டணி மிகவும் இணக்கமாக இருப்பதாக பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ராகுல் காந்தி தவெக தலைவர் விஜய்யுடன் பேசி இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் "கை" நம்மை விட்டு எங்கும் போகாது என்றார்.

அதேபோல் கரூர் விவகாரத்திற்கு பின் தவெக தலைமை வீட்டிலேயே அமைதியாக இருக்கிறது. தவெக தலைவர் விஜய் கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தவாறே வீடியோ கால் மூலமாக ஆறுதல் கூறி இருக்கிறார். அதேபோல் புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் எங்கிருக்கிறார்கள் என்பது இதுவரை தெரியவில்லை. கடலில் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக கொடியை பார்த்து, "மாபெரும் கூட்டணி அமைப்போம்.. பிள்ளையார் சுழி போட்டாச்சு" என்று பேசி இருக்கிறார். இதனால் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் அதிமுக தீவிரமாக இருப்பதாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதிமுக - பாஜக கூட்டணியில் தவெக இணையுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பத்திரிகையாளர் மணி பேசுகையில், தவெகவுக்கு இரு வாய்ப்புகள் மட்டுமே உள்ளது. அதில் முதல் வாய்ப்பு என்னவென்றால், தவெக தனியாக தேர்தலில் போட்டியிடுவது.. 2வது வாய்ப்பு அதிமுக கூட்டணிக்கு செல்வது.. அதிமுக கூட்டணி என்பதை அதிமுக - பாஜக கூட்டணி என்றே பார்க்க வேண்டும். பீகார் தேர்தலுக்கு நவம்பர் மாதத்தில் பாஜகவின் கவனம் தமிழ்நாடு பக்கம் திரும்பும்.
என்னைப் பொறுத்தவரை பாஜகவில் இருந்து அதிமுக பிரிந்து வரும் என்று நம்பவில்லை. அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.. ஒருவேளை விஜய் அதிமுக - பாஜக கூட்டணியோடு இணைய முடிவு செய்தால், அது தமிழக அரசியலில் பாதகமான முடிவை ஏற்படுத்தும். அப்படி இல்லையென்றால், தனித்து போட்டியிட்டால், அது திமுகவுக்கு சாதகமாக மாறிவிடும். 4 முனைப் போட்டி என்றால், நிச்சயம் திமுக கூட்டணிக்கு வாய்ப்பு உள்ளது.
மற்றபடி பாஜகவிடம் இருந்து பிரிந்து அதிமுக நிச்சயம் தவெகவுடன் கூட்டணி அமைக்கும் என்று பார்க்கவில்லை. பாஜகவுடன் ஒரு நிர்பந்தம் காரணமாக எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்தார். இனி பிரிந்து வந்தால், எடப்பாடி பழனிசாமி மீதான நம்பகத்தன்மை இன்னும் மோசமாகிவிடும். இந்த கூட்டணியே எப்படியும் இன்னும் 6 மாதத்தில் நன்றாக இணைந்துவிடும்.
ஏனென்றால் கடைசியில் முதல்வராக ஸ்டாலின் மீண்டும் வேண்டுமா? வேண்டாமா? என்பதே மக்கள் முன் வைக்கப்படும் கேள்வியாக இருக்கும். அப்படி வந்தால் எதிர் தரப்பில் எல்லோரும் ஒன்றாகவே சேர்வார்கள். அதனால் பாஜகவில் இருந்து அதிமுக பிரியும் என்று நம்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
-
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்?











Click it and Unblock the Notifications