“எடப்பாடி பழனிசாமி குடும்பத்தின் பிடியில் அதிமுக சிக்கிவிட்டது".. சிவி சண்முகம் பகீர் குற்றச்சாட்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: எடப்பாடி பழனிசாமி குடும்பத்தின் பிடியில் அதிமுக சிக்கிவிட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். எடப்பாடி பழனிசாமி பதவியைப் பறித்த நிலையில் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளவர்களின் கட்சிப் பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி பறித்துள்ளார். தவெக அரசுக்கு ஆதவராக வாக்களித்தவர்களின் கட்சிப் பொறுப்புகளைப் பறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

AIADMK

இந்நிலையில், தவெகவுக்கு ஆதரவு அளித்ததால் எடப்பாடி பழனிசாமியால் பதவிகள் பறிக்கப்பட்ட சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர் உள்ளிட்ட தலைவர்கள் சென்னையில் இன்று கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளனர்.

அப்போது சிவி சண்முகம் பேசுகையில், ""என்றைக்கு பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தோமோ அன்றைக்கே அதிமுக குடும்ப அரசியலுக்கு சென்று விட்டது. பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு தேர்தலுக்கு தேர்தல் அதிமுக தோல்வியடைந்து வருகிறது.

தோல்விக்குப் பொறுப்பேற்பவரே உண்மையான தலைவர். அதிமுக பல தேர்தல்களில் தோற்றாலும் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. வெற்றி பெற்றால் தன்னால் தான் என்பதும் தோற்றால் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் கைகாட்டுபவரும் நல்ல தலைவர் அல்ல. எடப்பாடி பழனிசாமி குடும்பத்தின் பிடியில் அதிமுக சிக்கிவிட்டது" எனக் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+