BJP vs AIADMK : நயினார் மீது கேஸ் போடுங்க.. கொதிக்கும் அதிமுக நிர்வாகிகள்! போலீசுக்கு சென்ற புகார்
சென்னை: பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் கூட்டாக புகார் அளித்துள்ளனர்.
தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு நேற்று பாஜகவினர் சார்பாக போராட்டம் நடத்தப்பட்டது. தஞ்சாவூர் பள்ளி மாணவியை அவரின் பள்ளி நிர்வாகம் மத மாற சொல்லி வறுபுறுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார்.. இதனால் தமிழ்நாட்டில் மத மாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பாஜக சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

சர்ச்சை பேச்சு
இந்த போராட்டத்தில் பேசிய பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், தமிழ்நாட்டில் அதிமுக எதிர்க்கட்சி போல செயல்படவில்லை. பாஜக எதிர்க்கட்சியாக இல்லை என்றாலும் கூட துணிந்து கேள்வி எழுப்புகிறது. பாஜக தலைவர் அண்ணாமலை அச்சமின்றி கேள்வி எழுப்பி வருகிறார். சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச அதிமுகவில் ஒரு எம்எல்ஏ கூட இல்லை. அதிமுக மக்கள் பிரச்சனையை சட்டமன்றத்தில் எப்போதுமே பேசுவதில்லை என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.

அதிமுக
தஞ்சாவூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் அதிமுக பெரிய அளவில் போராட்டங்கள் எதையும் நடத்தாததை விமர்சனம் செய்து நயினார் நாகேந்திரன் இப்படி பேசி இருந்தார். இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு அதிமுக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுக கூட்டணியின் தயவால்தான் பாஜக 4 எம்எல்ஏக்களை பெற்றது. அதிமுக கூட்டணி இல்லை என்றால் பாஜகவால் வெற்றி பெற்று இருக்க முடியாது.

தனித்து போட்டியிடட்டும்
உண்மையில் ஆண்மை இருந்தால் பாஜகவினர் தனித்து போட்டியிடட்டும். நயினார் நாகேந்திரன் பாஜக சார்பாக தனித்து போட்டியிட்டு முடிந்தால் சட்டசபைக்கு செல்லட்டும் என்று அதிமுகவினர் பலர் சவால் விடுத்துள்ளனர். அதிமுக நிர்வாகிகள் ராஜ் சத்யன் உள்ளிட்ட பலர் சமூக வலைத்தளங்களில் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக கோபமாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். கூட்டணியில் இருக்கும் சக கட்சியை பற்றி இப்படி பேசுவது மிகவும் தவறானது என்று விமர்சனங்களை வைத்து வருகிறார்கள்.

போலீசில் புகார்
இந்த நிலையில்தான் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் கூட்டாக புகார் அளித்துள்ளனர். கொளத்தூர் அதிமுக நிர்வாகிகள் இந்த புகாரை அளித்துள்ளனர். சென்னை K5 பெரவள்ளூர் காவல் நிலையத்தில் உதவி ஆணையாளரிடம் கொளத்தூர் அதிமுக நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் புகார் மனு அளித்து உள்ளனர். அதிமுக நிர்வாகிகளை பொது இடத்தில் தவறாக பேசிவிட்டார், இவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து புகார் அளித்தனர்.. இவர்களின் புகாரை தொடர்ந்து அதிமுக, பாஜக இடையிலான மோதல் பெரிதாகி உள்ளது.
Recommended Video

விளக்கம்
முன்னதாக தான் தெரிவித்த கருத்துக்கு நயினார் விளக்கம் அளித்து இருந்தார். அதில், இன்று வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின் போது , அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ள பட்டுள்ளது ! நான் கூறிய கருத்துக்கு எந்த விதமான உள்நோக்கமும் இல்லை ! போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே எண்ணம்!!, என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications