டென்ஷனான எடப்பாடி பழனிசாமி? அதிமுகவில் இருந்து வந்த திடீர் வார்னிங்.. பரபர எச்சரிக்கையின் பின்னணி
சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்த ஆலோசனை கூட்டம் தொடர்பாக பொய்செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள், ஊடகங்கள், சமூக வலைதள பக்கங்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று திடீரென்று அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இந்த எச்சரிக்கையின் பின்னணி பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் நடந்த முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைத்து தொகுதிகளிலும் தோற்றனர். இவர்களை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வீழ்த்தினர்.

முதல்வர் ஸ்டாலின் தான் கூறியபடியே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40க்கு 40 தொகுதிகளை கைப்பற்றினார். இது அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி 5க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 2ம் இடம் பிடித்துள்ளனர். இதுவும் அதிமுகவுக்கு பிரஷரை தந்துள்ளது.
இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் தோல்வியில் இருந்து மீண்டும் அதிமுக மீண்டும் எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனை எடப்பாடி பழனிசாமியும் நன்கு உணர்ந்துள்ளார். இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் முடிவு குறித்து தொகுதி வாரியாக எடப்பாடி பழனிசாமி சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டம் என்பது சென்னையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடந்து வருகிறது.கடந்த 10ம் தேதி தொடங்கிய ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் தான் அதிமுக பற்றி கட்டுக்கதைகளை செய்தியாகவும், வலைதள பதிவாகவும் பதிவிடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக திடீர் வார்னிங் விடுத்துள்ளது. இதுதொடர்பாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டங்கள் தொகுதி வாரியாக கடந்த 10ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இக்கூட்டத்தில் பல்வேறு நாடாளுமன்ற தொகுதிகளைச் சார்ந்த கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு, தங்களது சிறப்பான கருத்துக்களை தெரிவித்ததுடன், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கழக ஆட்சியை 2026ல் அமைப்பதற்கான வழிவகைகளையும், நல்ல பல கருத்துகளையும் தெரிவித்துவருகின்றனர்.
எம்ஜிஆர், ஜெயலலிதா கட்டிக்காத்த மக்கள் இயக்கமாம் அஇஅதிமுக ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது எனவும், பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்கக்கூடாது என ஆலோசனை கூட்டத்தில் பேசிய கழக நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில், அஇஅதிமுக மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சியால், சில ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதள பக்கங்கள் தவறான, உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு, கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றனர். செய்தி வெளியிடுவதற்கு முன் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து வெளியிட வேண்டும்.
பொய் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் சமூக வலைதள பக்கங்களுக்கு எங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.தொடர்ந்து இதுபோன்ற பொய் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள், பத்திரிக்கைகள் மற்றும் சமூக வலைதள பக்கங்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும்'' என கூறப்பட்டுள்ளது.
இந்த வார்னிங்கிற்கு பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. அதாவது சமீப நாட்களாக அதிமுக பற்றிய பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. அதாவது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மூத்த தலைவர்கள் அணியாக திரண்டு உள்ளனர். அதிமுகவில் மீண்டும் ஓ பன்னீர் செல்வம், சசிகலா, டிடிவி தினகரனை சேர்க்க வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி டென்ஷனாகியதாகவும், இதையடுத்து இந்த வார்னிங் மெசேஜ் அதிமுகவில் இருந்து வெளியிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
Election Exclusive: சிரிச்சுக்கிட்டே சமாளித்த எடப்பாடி..டஃப் தொகுதிகளை தள்ளி விட்டுட்டாரே! கொங்கில் போட்ட மெகா ஸ்கெட்ச்! -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
அன்று ஸ்டாலின்.. இன்று அமைச்சர் சக்கரபாணியை எதிர்த்து.. ஒட்டன்சத்திரத்தில் களமிறங்கும் விடியல் சேகர் -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
அதிமுக கூட்டணியில் தாமரையின் '32'.. 2021 புள்ளி விவரம் என்ன.. பாஜகவினர் அறிய வேண்டியவை -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications