வைப்பு நிதியில் ரூ.261 கோடி… ஒரு பைசா வெள்ள நிவாரண தராத அதிமுக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மழை வெள்ளத்தை வைத்துப் பல அரசியல் சர்ச்சைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், இந்தத் துயர் மிகுந்த நேரத்தில் அதிகம் தேவையானது நிதியுதவியே தவிர, விமர்சனங்கள் அல்ல. கட்சி பேதம் இல்லாமல் கையில் உள்ள சிறு தொகையைக் கொடுத்தால்கூட அது பல குடும்பங்களின் மறுவாழ்வு அளிக்க உதவும்.

ஆனால், பலரும் எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்யாமல் இருந்து வருகிறார்கள். மத்திய அரசின் பிரதிநிதியாக இங்கே உள்ள கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெள்ள நிவாரணப் பணிக்காக இதுவரை ஒரு ரூபாய்கூட வழங்கவில்லை.

AIADMK which has Rs 261 crore in bank deposits, has not given a single rupee to the flood relief fund

தமிழ்நாட்டு அரசியலில் அதிமுகவும் திமுகவும் எதிரும் புதிருமாகப் பல காலமாக இருந்துவருவதை மக்கள் அனைவரும் அறிவர். அப்படி இருதுருவங்களாகச் செயல்பட்டு வந்த அந்தக் கட்சிகளே பேரிடர் காலத்தில் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக நின்றிருக்கின்றன.

சுனாமி நிதிக்கு ரூ.21 லட்சம் தந்த திமுக:

கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ்நாட்டைச் சுனாமி பேரலை மிகக் கடுமையாகத் தாக்கியது. அப்போது அதிமுக சார்பில் முதல்வராக ஜெ.ஜெயலலிதா இருந்தார். அந்தப் பேரிடரிலிருந்து தமிழகத்தை மீட்கப் பலரும் நிதி அளித்து வந்தனர்.

அந்த வரிசையில் 2005 ஜனவரி மாதம் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு திமுக தலைவர் கருணாநிதி வழங்கிய ரூ.21 லட்சத்தை அன்றைய திமுக துணை பொதுச் செயலாளர் ஸ்டாலின் முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரில் வழங்கினார்.

AIADMK which has Rs 261 crore in bank deposits, has not given a single rupee to the flood relief fund

அப்போது, தனது நன்றியைக் கருணாநிதியிடம் தெரிவிக்கும்படி ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். ஜெயலலிதாவுக்குக் கருணாநிதி எழுதிய கடிதத்தையும் ஸ்டாலின் முதல்வரிடம் வழங்கினார்.

அந்த கடிதத்தில், "கண்ணம்மா திரைப்படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதுவதற்கு எனக்கு வழங்கப்பட்ட ரூ.10லட்சத்தையும், மண்ணின் மைந்தன் திரைப்படத்துக்கு திரைக்கதை, -வசனம் எழுதுவதற்காக அளிக்கப்பட்ட ரூ.11 லட்சத்தையும் ஆக மொத்தம் 21 லட்சம் ரூபாயை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் மெளனம்:

அந்தப் பணத்திலிருந்து வழங்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அதிமுக 66 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றன. அவர்களின் ஒரு மாத ஊதியத்தையாவது இந்த வெள்ள நிவார நிதிக்கு அளிக்கிறோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் அறிவித்திருக் கலாம்.

AIADMK which has Rs 261 crore in bank deposits, has not given a single rupee to the flood relief fund

ஆனால், அவர் ஏனோ செய்யவில்லை. இந்த விசயத்தில் அவர் ஜெயலலிதா அளவுக்குக் கூட இறக்கம் காட்டாமல் இருப்பது வேதனையான விசயமாகவே மக்கள் பார்க்கின்றனர்.

அவர் தனது கட்சி நிதியைக் கூட வழங்கி இருக்கலாம். அதையும் செய்யவில்லை. முறையாகப் பார்த்தால், அவர் முதல்வரைப் பார்த்து வெள்ள நிவாரணத்திற்கு ஒரு நிதியை அளித்திருக்கவேண்டும்.

சுனாமி வந்தபோது மு.கருணாநிதி செய்ததைப் போன்று அவர் மனம் மக்கள் படும் துயரத்தைக் கண்டு இறங்கி இருக்க வேண்டும். ஒரு துரும்பையும் அவர் கிள்ளிப்போடாமல் மௌன விரதத்தைக் கடைப்பிடித்துவருகிறார்.

மாநிலக் கட்சியான அதிமுகவே நிதியை வழங்காமல் இருக்கும் போது, மத்திய அரசு மழை வெள்ள நிவாரணத்திற்கு உரிய நிதியை அளிக்கவேண்டும் என்றும் பொதுவாக மத்திய அரசுகள் தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரண நிதி அளிப்பதில் மாற்றான் தாய் மனப்பான்மையோடு செயல்படுகின்றன என்றும் அவர் பேசிய இருப்பது வேடிக்கையாகவே உள்ளது.

திமுக எம்.பி. & எம்.எல்.ஏ.க்கள் அளித்த நிதி:

சொந்த மாநிலத்து மக்கள் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் காலத்தில் வெறும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் போடுவதோடு அதிமுகவின் கடமை முடிந்துவிட்டதா? என்கிறார் பழைய அதிமுக விசுவாசி ஒருவர்.

AIADMK which has Rs 261 crore in bank deposits, has not given a single rupee to the flood relief fund

ஆனால், இன்றைக்கு ஆட்சி உள்ளது திமுக. எதிர்க்கட்சியாக இருக்கிறது அதிமுக. அந்தக் கட்சியின் பொதுக்குழு நேற்றுதான் நடைபெற்றது. அதில் அதிமுக வங்கிக் கணக்கில் ரூ.261 கோடி ரூபாய் நிலை வைப்புத்தொகை உள்ளதாக அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று பொதுக்குழு வில் தெரிவித்திருந்தார்.

சுமார் ரூ.261 கோடி ரூபாயை வைத்துள்ள கட்சியான அதிமுக அதிலிருந்து இந்த வெள்ள நிவாரணத்திற்கு உதவும் படி ஒரு ரூபாயை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கவில்லை.

2015இல் ஆட்சியில் அதிமுக இருந்த போது வெள்ள நிவாரண நிதிக்கு அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் 1 மாத சம்பளத்தை வழங்குவர் என்று ஜெயலலிதா அறிவித்தார்.

அதைப்போன்று இன்றைக்கு ஆட்சியில் உள்ள திமுக மழை வெள்ள பாதிப்புகளுக்கு அரசுக்கு உதவும் வகையில் அமைச்சர்களின் ஒரு மாத சம்பளமான 35 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மற்றும் திமுக எம்எல்ஏக்களின் ஒரு மாத சம்பளம் 91 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாயையும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அளிக்க முடிவெடுத்துள்ளது.

AIADMK which has Rs 261 crore in bank deposits, has not given a single rupee to the flood relief fund

திமுக தமிழக மக்கள் படும் கஷ்டங்களைக் கண்டு மத்திய அரசிடம் இடைக்கால நிதியைக் கேட்டு மக்களவையில் டி.ஆர்.பாலுவும், சிவாவும் குரல் கொடுத்த போது அதிமுகவைச் சேர்ந்த பொன்னையன் 4 ஆயிரம் கோடியை என்ன செய்தீர்கள் என்று வாதம் செய்கிறார்.

அவர் தமிழ்நாட்டுக்கு ஆதரவாகப் பேசவில்லை என்றாலும் அந்தத் தருணத்தில் அமைதியாக இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார் ஒபிஎஸ் விசுவாசி ஒருவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+