"எனது சுற்றுப்பயணம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்”.. எடப்பாடி பழனிசாமி பேட்டி
சென்னை: "நான் எப்போதும் மக்களுடன்தான் பயணிக்கிறேன், எனது சுற்றுப்பயணம் மூலம் அதிமுக மிகப்பெரிய மக்கள் ஆதரவை பெற்று, மாற்றத்தை ஏற்படுத்தும்" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்திக்க உள்ளார் எடப்பாடி பழனிசாமி. சுற்றுப் பயணத்திற்கான லோகோ மற்றும் பாடலை இன்று வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி.

அதைத்தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, "திமுக ஆட்சியை அகற்றவே சுற்றுப்பயணம் செல்கிறேன். ஜூலை 7 ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் இருந்து தேர்தல் சுற்றுப் பயணத்தை தொடங்குகிறேன். 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.
திமுகவை வேரோடு அழிக்க வேண்டுமென தொடங்கப்பட்ட கட்சிதான் அதிமுக. நான் எப்போதும் மக்களுடன் தான் பயணிக்கிறேன். எனது சுற்றுப்பயணம் மூலம் அதிமுக மிகப்பெரிய மக்கள் ஆதரவை பெறும். இந்தப் பயணத்தின் நோக்கம், கடந்த 50 மாத ஆட்சியிலே மக்கள் படும் துன்பங்களை எடுத்துச் சொல்லி மக்கள் ஆதரவை அதிமுகவுக்கு திரட்டுவது தான்.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி. நான்தான் முதலமைச்சர் வேட்பாளர். ஒத்த கருத்து கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்" எனத் தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் வரும் 7 ஆம் தேதி முதல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்னும் 8 மாதங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் செல்கிறார் எடப்பாடி பழனிசாமி. வரும் ஜூலை 23 ஆம் தேதி வரை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணத்துக்கான ஷெட்யூல் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 7 ஆம் தேதி கோவை மேட்டுப்பாளையம், 8 ஆம் தேதி கோவை மாநகர், 10 ஆம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டி மற்றும் திண்டிவனம், 11 ஆம் தேதி விழுப்புரம், 12 ஆம் தேதி கடலூர், 14 ஆம் தேதி கடலூர் குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி, 15 ஆம் தேதி பெரம்பலூர், அரியலூர், 16 ஆம் தேதி சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார் கோவில், 17 ஆம் தேதி மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், 18 ஆம் தேதி திருவாரூர், நாகை, கீழ்வேளூர் ஆகிய சட்டசபை தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் எடப்பாடி.
வரும் 19 ஆம் தேதி நாகை, வேதாரண்யம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, 21 ஆம் தேதி திருவாரூர் மன்னார்குடி, கும்பகோணம், 22 ஆம் தேதி தஞ்சாவூர் பாபநாசம், திருவையாறு, 23 ஆம் தேதி தஞ்சாவூர் மத்தியம் ஒரத்தநாடு, பேராவூரணி பட்டுக்கோட்டை ஆகிய இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி.
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது!












Click it and Unblock the Notifications