"ஒரே நாடு ஒரே தேர்தல்" அதிமுக ஆதரவு.. எடப்பாடி பழனிசாமி ட்வீட்.. சொல்லும் காரணங்கள் இதுதான்!
சென்னை: மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக வலியுறுத்துகிறது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடர் வரும் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 5 நாள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் 5 அமர்வுகளாக நடைபெற உள்ள நிலையில் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்தும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் பல்வேறு யூகங்கள் கிளம்பி வருகிறது..

குறிப்பாக மத்திய அரசு ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இது குறித்த பேச்சுக்கள் அதிகரித்துள்ளது. அதுமட்டும் இன்றி ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய மத்திய அரசு சிறப்புக்குழுவையும் அமைத்து இருக்கிறது.
முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழு ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்லை நடத்துவது சாத்தியமா? என்பது குறித்து ஆராய உள்ளது. இதனால் தற்போது மீண்டும் "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டம் விவாதப்பொருளாகி உள்ளது.
இந்த நிலையில், அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நடைமுறைக்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:- ஒரே நாடு தேர்தல் நடைமுறை கொள்கையை அதிமுக உறுதியாக ஆதரிக்கிறது.
AIADMK supports One Nation One Election policy ,
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) September 1, 2023
AIADMK strongly advocates Elections for the Lok Sabha and state assemblies be held simultaneously
As it will escalate the speed of our country’s development and avoid political instability.
Simultaneous elections will save the…
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்தும். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் ஜனரஞ்சக திட்டங்களை விட வளர்ச்சியே மிக முக்கியமாக இருக்கும். எந்த அரசும் கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்கும் நீண்ட கால இடையூறு இல்லாத ஆட்சியை வழங்கும்" என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications