எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நெல்லையில் கருப்புக் கொடி.. கல்வீசி தாக்குதல் நடத்திய அதிமுகவினர்!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட முயன்றவர்கள் மீது அதிமுகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பவானி வேல்முருகன் தலைமையில் கருப்பு கொடி காட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதிமுகவில் அவர்களை கல்வீசி தாக்கியுள்ளனர். இரு தரப்பினரையும் போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

AIADMK Workers Hurl Stones at Black Flag Protesters During EPS Visit

எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம்

நெல்லை சந்திப்பு பகுதியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அங்கு பரப்புரையில் ஈடுபட்டபோது, திடீரென எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்பு கொடி காட்டப்பட்டது. அப்போது அதிமுகவினர் சிலர், கருப்புக்கொடி காட்டியவர்களுடன் வாக்குவாதம் மற்றும் மோதலில் ஈடுபட்டனர்.

கல்வீச்சு

மேலும், கருப்புக் கொடி காட்டியவர்கள் மீது அதிமுகவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் நெல்லை சந்திப்பு பகுதியே களேபரமானது. இரு தரப்பினரையும் போலீசார் தடுத்து நிறுத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதிமுக கூட்டணி

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் தங்கள் கூட்டணியை இறுதி செய்துவிட்டன. எனினும் இந்த கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் என்னென்ன என்று அறிவிக்கப்படவில்லை. மேலும் பல கட்சிகள் கூட்டணியில் இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார்.

கோஷம் - பரபரப்பு

இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொகுதி வாரியாக சுற்றுப்பணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் அவர் பரப்புரை செய்தபோது, ஒரு தரப்பினர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கருப்பு கொடி காட்டினர். "எடப்பாடி ஒழிக" என்று கோஷமிட்டனர். அப்போது அங்கிருந்த அதிமுக தொண்டர்கள், அவர்களுடன் வாக்குவாதம் செய்தனர். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில், இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனா்.

இதில் பரப்புரைக்கு வந்த பலரும் காயமடைந்தனர். இந்த சம்பவத்தின்போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

எடப்பாடிக்கு விருந்து

எடப்பாடி பழனிசாமியின் நெல்லை பரப்புரைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டியவர்கள் பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் பவானி வேல்முருகன் தலைமையில் கருப்பு கொடி காட்ட முயற்சித்ததாக கூறப்படுகிறது.

முன்னதாக நேற்று இரவு, எடப்பாடி பழனிசாமி நெல்லைக்கு சென்றபோது, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அவருக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பாஜக அதிமுக கூட்டணியின் தேர்தல் வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+