சீமான்: வாழ்த்து சொன்ன அதிமுக எடப்பாடி பழனிசாமி + பாஜக அண்ணாமலை, வானதி+ பாமக அன்புமணி+ விஜய்
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 57-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீன்வாசன் எம்.எல்.ஏ, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் விஜய், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை தொடங்கிய சீமான் 2016, 2021 சட்டசபை தேர்தல்களிலும் 2019 லோக்சபா தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டது. இப்போதும் எப்போதும் தனித்தே போட்டி; கூட்டணியே கிடையாது என்பதில் சீமான் உறுதியாக அறிவித்து வருகிறார். 2016-ம் ஆண்டு 1.10% வாக்குகள் பெற்ற நாம் தமிழர் கட்சி 2021 தேர்தலில் சுமார் 7% வாக்குகளைப் பெற்றிருக்கிறது. தமிழகம், புதுச்சேரியில் சுமார் 32 லட்சம் வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி 1 கோடி வாக்குகளை இலக்காக வைத்து பயணிக்கிறது.

சீமானின் 57-வது பிறந்த நாள் இன்று நாம் தமிழர் தம்பி- தங்கைகளால் எழுச்சியுடனும் உற்சாகமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் சீமானுக்கு வாழ்த்துகள் குவிக்கப்பட்டு வருகின்றன.
எடப்பாடி பழனிசாமி: சீமானுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், அன்பு சகோதரர், சீமான் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். திரு.சீமான் அவர்களின் பொதுவாழ்வு சிறந்து நீடூழி வாழ உளமாற வாழ்த்துகிறேன்.

அண்ணாமலை: சீமானுக்கு பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை தெரிவித்த வாழ்த்து: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் சீமான் அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் மக்கள் பணிகளை தொடர வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.

வானதி சீனிவாசன்: பாஜக மகளிர் அணி தலைவரும் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன்: இன்று பிறந்தநாள் காணும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சகோதரர் சீமான் அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். சகோதரர் சீமான் அவர்கள் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

அன்புமணி ராமதாஸ்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நண்பர் சீமான் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நீண்டகாலம் நல்வாழ்வு வாழ்ந்து மண்ணுக்கும், மக்களுக்கும் சேவை செய்ய வாழ்த்துகிறேன்.
நடிகர் விஜய்: மேலும் நடிகர் விஜய், சீமானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கினால் சீமான் கூட்டணி அமைப்பாரா? என கேள்விகள் முன்வைக்கப்பட்டும் வருகின்றன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications