"எய்ட்ஸ்" இருக்கும்போது எப்படி உடலுறவு.. "தற்கொலைக்கு பிறகே, அவள் உடலை குக்கரில் வேகபோட்டேன்".. ஐயயோ
சென்னை: காதலியை குக்கரில் வேகவைத்தாரே, அவரது வாக்குமூலம் ஒன்று தற்போது வெளிவந்து பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது.. இதனால் போலீசாரே கிறுகிறுத்துபோய் உள்ளனர்.. அத்துடன் உண்மையை கொண்டுவரும் முயற்சியிலும் மிக தீவிரமாக இறங்கி உள்ளனர்.
மகாராஷ்டிராவின் மிரா பயந்தர் பகுதியில் அப்பார்ட்மென்ட்டில் நடந்த கொலை மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. லிவ் இன் டூ கெதர் முறையில் வசித்து வந்துள்ளது ஜோடி.
மனோஜ் என்ற அந்த நபருக்கு 56 வயதாகிறது.. சரஸ்வதி என்ற அந்த பெண்ணுக்கு 36 வயதாகிறது.. தம்பதிக்குள் தகராறு வந்துள்ளது. இதனால் சரஸ்வதியை அவர் கொன்றதாக தெரிகிறது.

வீட்டிற்குள்ளிருந்து பிணவாடை வந்ததுமே, அந்த பகுதி மக்கள் போலீசுக்கு போயுள்ளனர்.. போலீசார் வந்தபோது, அவர்களை உள்ளே விட மனோஜ் மறுத்துவிட்டாராம்.. பிறகு, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தால், போலீசாருக்கே குமட்டிக்கொண்டு வந்திருக்கிறது.. சகிக்க முடியாத துர்நாற்றம் வீசவும், முதலில் பெட்ரூம் சென்று பார்த்துள்ளனர்.. அங்கு பிளாஸ்டிக் பையில், ரத்தக்கறை படிந்த ரம்பம் இருந்துள்ளது. கிச்சனுக்கு போய் பார்த்தபோதுதான், தலையே சுற்றிவிட்டதாம்...
மனித சதைகள்: குக்கரில் வேகவைத்த மனித சதைகள் இருந்ததுடன், சில பாத்திரங்களில் அந்த பெண்ணின் தலைமுடி கிடந்திருக்கிறது. பாதி எரிந்த எலும்புகள் டப்பாக்களில் இருந்திருக்கின்றன.. மிச்ச உடல் துண்டுகள் பக்கெட்களில் கிடந்துள்ளன.. சில உடல் பாகங்களை மிக்சியில் போட்டு அரைத்துள்ளார்..
முதலில், சுமார் 20 துண்டுகளாக வெட்டப்பட்டிருக்கிறார்.. 13 துண்டுகள் மட்டுமே போலீசார் இப்போது கைப்பற்றி உள்ள நிலையில், மற்ற துண்டுகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், மனோஜ் ஒரு வாக்குமூலம் தந்துள்ளார். அந்த வாக்குமூலம் இதுதான்:

"என்னுடைய நடத்தை மீது சரஸ்வதிக்கு நிறைய சந்தேகம் வரும்.. அதனால், அடிக்கடி சண்டையிடுவது வழக்கம்.. அப்படித்தான் சம்பவத்தன்றும் சண்டை வந்தது.. அப்போது சரஸ்வதி விஷத்தை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்டார். அந்த சடலத்தை பார்த்து பயந்துபோன நான், போலீஸார் கைதுசெய்து விடுவார்கள் என்று நினைத்தேன்.. உடனே உடலை பல துண்டுகளாக வெட்டி அப்புறப்படுத்தினேன்..
கொலை? : இதற்காக, வெப் சீரியஸ் மற்றும் டெல்லி ஷ்ரத்தா படுகொலை தொடர்பான செய்திகளை பார்த்துத்தான் உடலை வெட்டி அப்புறப்படுத்த முடிவு செய்தேன். முதலில் உடலை 3 துண்டுகளாக வெட்டினேன். அதன் பிறகு மேற்கொண்டு சிறுசிறு துண்டுகளாக வெட்டினேன். சரஸ்வதியை நான் கொலைசெய்யவில்லை... எனக்கு எய்ட்ஸ் நோய் இருக்கிறது. அதற்காக சிகிச்சையும் எடுத்து வருகிறேன்.
விபத்து ஒன்றில் சிக்கி சிகிச்சை பெற்றபோது ரத்தம் கொடுத்தபோது அதன் மூலம் எய்ட்ஸ் நோய் பரவியிருக்கும் என்று நினைக்கிறேன்.. எய்ட்ஸ் இருந்ததால் சரஸ்வதியுடன் நான் ஒருபோதும் பாலியல் உறவு வைத்துக்கொண்டதில்லை. அவரை மிகவும் அதிகமாக நேசித்தேன்.. கல்யாணம் செய்து கொள்ளவும் ஆசைப்பட்டேன்.. ஆனால் எய்ட்ஸ் இருந்ததால் அப்படி செய்யவில்லை. அதனால், சரஸ்வதியை என்னுடைய மகளை போலவே கவனித்துக்கொண்டேன்.
சந்தேகம்: எப்போது நான் வீட்டிற்கு தாமதமாக வந்தாலும் என் மீது சரஸ்வதிக்கு சந்தேகம் வந்துவிடும்.. உடனே எங்களுக்குள் சண்டையும் வந்துவிடும்.. 10-வது வகுப்பு படிக்கவேண்டும் என்று சரஸ்வதி விரும்பினார். நான்தான் அவருக்கு கணிதம் கற்றுக்கொடுத்தேன்'' என்று புதுப்புது தகவல்களை சொல்கிறார் மனோஜ்..
இதனிடையே, குத்திக்கொலை செய்த பிறகுதான் உடலை பல துண்டுகளாக வெட்டி இருக்கவேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம் என்று போலீஸ் தரப்பில் சொல்கிறார்கள். அந்த வீட்டில் 3 பக்கெட் நிறைய ரத்தம் இருந்ததாம்.. பக்கெட்டுக்குள்ள சில உறுப்புகளும் இருந்திருக்கின்றன.
மொத்த உடல் உறுப்புகளை எடுத்துச்செல்ல வைத்திருந்த பிளாஸ்டிக் பேக்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது... உடலை அறுக்க, புதிதாக ஒரு ரம்பம் வாங்கியிருக்கிறார். அதையும் கைப்பற்றியுள்ளனர்.. மனோஜ் வீட்டில் வாஷ்பேசின், பாத்ரூம், கிச்சன் என எல்லா இடங்களிலுமே உடல் உறுப்புகள் சிதறி சிதறி கிடந்ததாம்.

புது ட்விஸ்ட்: இப்போது மனோஜ் சொன்ன வாக்குமூலம் புது ட்விஸ்ட்டை தந்துள்ளது.. எய்ட்ஸ் நோய் இருப்பதாக சொல்கிறார்.. அதனால், அது உண்மையா என்பது குறித்து உறுதி செய்யவேண்டியிருக்கிறது என்கிறார்கள் போலீசார்.. அதோடு சரஸ்வதியை கொலைசெய்யவில்லை என்றும் சொல்வதால், அதுகுறித்த உண்மைத்தன்மையையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். வரும் 16-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உள்ளார்கள்..
உண்மையா: ஆனால், மனோஜ் பற்றி அவரது உறவினர் ஒருவர் சொல்லும்போது, "மனோஜ் யார்கிட்டயுமே ரொம்ப பேசமாட்டார். அவரது அப்பா, அம்மா இறந்தபோது, நிறைய கடனில் சிக்கி இருந்தார்... அவரின் சமுதாயத்தினரும், உறவினர்களும் தான் அவருக்கு பணம் கொடுத்து உதவி செய்தனர்'' என்கிறார்கள்.. இதைவிட ஆச்சரியம் என்னவென்றால், இதுக்கு முன்பு டெல்லியில் கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தாவும், இதே மீரா பயந்தர் பகுதியை சேர்ந்தவர்தான்..!!
இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. கடந்த 2010-ம் ஆண்டு மார்க்கெட்டில், சரஸ்வதியை அடிக்கடி சந்தித்துள்ளார் மனோஜ்.. தன்னை ஒரு அனாதை என்று மனோஜிடம் சரஸ்வதி சொன்னாராம்.. இதனால் சரஸ்வதி மேல் இரக்கம் அதிகமாகி உள்ளது. அதனாலேயே தன்னுடைய வீட்டில் வேலைக்கு உதவிக்காக அழைத்து சென்றிருக்கிறார்..
காதல்: முதலில் மகளை போல பார்த்து கொண்டாராம்.. ஆனால், சரஸ்வதி, நாளடைவில் மனோஜை விரும்பினாராம்.. பிறகு மனோஜும் அந்த பெண்ணை காதலித்தாராம்.. கணவன்- மனைவி போல வாழ ஆசைப்பட்டுதான், அந்த அப்பார்ட்மென்ட்டுக்கு கடந்த 5 வருடங்களுக்கு முன்பு வந்திருக்கிறார்கள். தாலிகட்டாமல் வாழ்ந்தாலும் வாழ்க்கை இனிமையாக சென்றதாம்.. திடீரென மனோஜுக்கு வேலை போகவும், தகராறு வெடித்துள்ளது.. இதுதான் பிரச்சனைக்கு முக்கியமான காரணம் என்று போலீசில் சொல்லி உள்ளார் மனோஜ்.
மரம் அறுக்கும் கத்தியை வாங்கினாராம்.. பிறகு ரம்பம் வாங்கினாராம்.. உடல் உறுப்புகளை ரம்பம், கத்தியால் குட்டி குட்டியாக வெட்டி குக்கரில் வேக வைத்து, அதற்கு பிறகு அவைகளை வெளியே எடுத்து, வெந்நீரில் கழுவியிருக்கிறார்.. இவர் வீட்டுக்கு பக்கத்தில்தான் ரெயில்வே தண்டவாளம் இருக்கிறதாம்.. அங்கே நிறைய நாய்கள் சுற்றிக்கொண்டு இருக்குமாம். அதனால் அங்கு கொண்டு சென்று போட்டு வந்துள்ளார்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications