ஏர் இந்தியா விமான விபத்து.. விசாரணையில் இது மட்டும் தெரிந்தால்.. போயிங் நிறுவனத்திற்கு ஆப்பு! போச்சு
சென்னை: ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக தீவிரமான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதில் தவறு யார் மீது என்று தெரியவரும் பட்சத்தில் விசாரணையில் அது பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று லண்டன் சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானது. லண்டன் நோக்கிச் சென்ற விமானம், பி.ஜே மருத்துவக் கல்லூரி அருகே குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஒருவர் தவிர மற்ற அனைவரும், தரையில் இருந்த பலரும் உயிரிழந்தனர்

லண்டன் சட்ட வல்லுனர்கள் கருத்து
லண்டன் சட்ட நிபுணர்களின் கூற்றுப்படி, சர்வதேச விமானப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் ஏர் இந்தியா அல்லது போயிங் நிறுவனம் கவனக்குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டால், எல்லா சேதங்களுக்கும் மொத்தமாக ஏர் இந்தியா - போயிங் இரண்டும் பொறுப்பேற்க நேரிடலாம். ஏர் இந்தியா நிறுவனம் 1.5 பில்லியன் டாலர் காப்பீட்டுப் பாதுகாப்பு வைத்திருந்தாலும், லண்டன் சந்தை மூலம் மறு காப்பீடு செய்யப்பட்டிருந்தாலும், இதுபோன்ற நிகழ்வுகளில் இழப்பீட்டுத் தொகைகள் நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளை மீறக்கூடும். அதாவது தவறு அவர்கள் மீது என்று தெரிந்தால்.. இழப்பீடு இன்னும் அதிகம் வழங்க வேண்டி இருக்கும்.
விபத்து விவரங்கள்
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விபத்துக்குள்ளானதில், விமானத்தில் இருந்த 12 ஊழியர்கள் உட்பட 241 பேரும், தரையில் 33 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று ஏர் இந்தியா ஏற்கனவே அறிவித்துள்ளது.
மான்ட்ரீல் உடன்படிக்கை
விபத்தில் உயிரிழப்பு அல்லது கடுமையான காயம் ஏற்பட்டால், மான்ட்ரீல் உடன்படிக்கையின் கீழ், விமான நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்றும், குறைந்தபட்ச இழப்பீடாக 151,800 SDRs செலுத்த வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இது இழப்பீடு வழங்குவதற்கான அலகு ஆகும். ஒரு SDR-ன் மதிப்பு சுமார் ₹120 ஆக இருக்கும் நிலையில், ஒரு நபருக்கு ₹1.82 கோடி வரை இழப்பீடு வழங்கப்படலாம். தவறு நடந்ததா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், இந்த அடிப்படை இழப்பீட்டை விமான நிறுவனம் வழங்க வேண்டும். இதைத் தாண்டி, கவனக்குறைவு நிரூபிக்கப்பட்டால், கூடுதல் இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு கிடைக்கும் இழப்பீடு
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் தங்கள் சொந்த நாடுகளிலும் இழப்பீடு கோரலாம். குறிப்பாக, இங்கிலாந்து நீதிமன்றங்கள் எதிர்கால வருமானம் மற்றும் தனிப்பட்ட வறுமை சூழ்நிலைகளை கருத்தில் கொள்கின்றன. அங்கே வழக்கு தொடுத்தால் கூடுதல் இழப்பீடு கிடைக்கும். இந்த விமானத்தில் 181 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ் மக்கள், ஏழு போர்த்துகீசியர்கள் மற்றும் ஒரு கனடியர் ஆகியோர் இருந்தனர். இது குறித்து ஏர் இந்தியா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
சட்ட சிக்கல்கள்
போயிங் 787 விமானத்தில் ஏதேனும் குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், போயிங் நிறுவனமும் வரம்பற்ற பொறுப்பை ஏற்க நேரிடும். பாதிக்கப்பட்டவர்களின் நாடு மற்றும் வருமானத்தைப் பொறுத்து இழப்பீட்டுத் தொகைகள் மாறுபடலாம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
போயிங் 787 விமானத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டால், அமெரிக்க மற்றும் இங்கிலாந்து நீதிமன்றங்களில் போயிங் நிறுவனம் வரம்பற்ற பொறுப்பை ஏற்கும் நிலை ஏற்படும். இதில் தவறு யார் மீது என்று தெரியவரும் பட்சத்தில் விசாரணையில் அது பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று லண்டன் சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
டார்ட்ஸ் சட்டம்
ஏர் இந்தியா நிறுவனம் கவனக்குறைவாக இல்லை என்பதை நிரூபிக்கும் வரை, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வரம்பற்ற சேதங்களுக்கு ஏர் இந்தியா பொறுப்பேற்க வேண்டும். அவ்வாறு நிரூபித்தால் மட்டுமே, ஏர் இந்தியா வழங்க கூடிய இழப்பீட்டை குறைக்க முடியும். ஒருவேளை ஏர் இந்தியா - அல்லது போயிங் மீது தவறு உறுதியானால்.. கடுமையான அபராதங்கள் விதிக்கப்படும். இழப்பீடும் அதிகமாக வழங்க வேண்டிய நிலை ஏற்படும்.












Click it and Unblock the Notifications